ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேயின் குரூப் –ஏ சேவைகளின் எட்டு அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சரவை ஓப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2019 8:52PM by PIB Chennai
இந்திய ரயில்வே கணக்குகள் சேவை (ஐ ஆர் ஏ எஸ்), இந்திய ரயில்வே ஊழியர்கள் சேவை, (ஐ ஆர் பி எஸ்), இந்திய ரயில்வே போக்குவரத்துச் சேவை (ஐ ஆர் டி எஸ்), இந்திய ரயில்வே பொறியாளர்கள் சேவை (ஐ ஆர் எஸ் இ), இந்திய ரயில்வே மின்பொறியாளர்கள் சேவை (ஐ ஆர் எஸ் இ இ), இந்திய ரயில்வே எந்திரவியல் பொறியாளர்கள் சேவை (ஐ ஆர் எஸ் எம் இ), இந்திய ரயில்வே பொருட்கள் இருப்பு சேவை (ஐ ஆர் எஸ் எஸ்), இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளர்கள் சேவை (ஐ ஆர் எஸ் எஸ் இ) என ரயில்வேயில் உள்ள குரூப்-ஏ சேவைகளின் எட்டு அமைப்புகளின் அதிகாரிகள் பற்றிய ஆய்வு ஆலோசனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐ ஆர் பி எஸ் அதிகாரி பதவிக்கு இணையாக உறுப்பினர் (ஊழியர்) பதவியை உருவாக்கவும், தலைமை இயக்குநர் (சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு), தலைமை இயக்குநர் (பொருட்கள் இருப்பு), தலைமை இயக்குநர் (பாதுகாப்பு) ஆகிய பதவிகள் முறையே உறுப்பினர் (சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு) உறுப்பினர் (பொருட்கள் நிர்வாகம்), என மறுபெயர் சூட்டப்பட்டுள்ளது.
2012-லிருந்து அதிகாரிகள் ஆய்வு நிலுவையில் உள்ளதால் தற்போது இந்தச் சேவைகளில் உள்ள 900 அதிகாரிகள் பயனடைவார்கள்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1565426)
வருகையாளர் எண்ணிக்கை : 164