பிரதமர் அலுவலகம்
2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கான கலாச்சார நல்லிணக்க தாகூர் விருதுகள், குடியரசுத் தலைவர் வழங்கினார்
விவேகானந்தர், தாகூர் போன்ற பெருமக்களால் அடிமைப்பட்டிருந்த காலத்திலும், இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படவில்லை என்கிறார் பிரதமர் மோடி
மணிப்பூரி நடனக் கலைஞர், பங்களாதேஷ் சிற்பக் கலைஞர் உள்ளிட்டோருக்கு விருது
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2019 5:46PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கலாச்சார நல்லிணக்க தாகூர் விருதுகளை சயாநவுட் என்ற பங்களாதேஷ் கலாச்சார அமைப்பைச் சேர்ந்த திரு ராஜ்குமார் சிங்காஜித் சிங் மற்றும் சிற்பக்கலைஞர்
திரு. ராம் வஞ்சி சுதார் ஆகியோருக்கு புதுதில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கினார். பிரதமர் தலைமையிலான நடுவர் குழு இந்த விருதாளர்களைத் தேர்ந்தெடுத்தது. இந்தக் குழுவில் இந்திய தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. என்.கோபால் சுவாமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய குழுமத்தின் தலைவர் திரு. வினய் சகஸ்ரபுத்தே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி எந்த தேசத்திற்குமே கலாச்சாரம் அதற்கான அடையாளத்தை அளிக்கிறது என்று கூறினார். “காலனி ஆதிக்கம் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பின் போதும் கூட இந்தியாவின் வளமான கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டது”. குருதேவ் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற மகத்தானவர்களின் பங்களிப்பால் மட்டுமே இது சாத்தியமானது.
இந்தியாவின் பன்முக கலாச்சாரம் குருதேவின் பங்களிப்பில் பிரதிபலிக்கிறது. ரபீந்திரரின் கவிதைகளில் நாட்டின் பன்முக கலாச்சாரமும் அடங்கி உள்ளன. இது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. தாகூரின் போதனைகள் காலம் கடந்ததாகும். இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு மூலம் உலகம் பெருமளவில் கற்றுக் கொள்ள முடியும். “பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்கள் என்று பிரதமர் கூறினார்.
மணிப்பூர் நடனக் கலையில் சிறந்து விளங்கும் திரு. ராஜ்குமார் சின்ஹாஜித் சிங்-கிற்கு 2014-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டுக்கான விருது குருதேவ் ரவீந்திர நாத் தாகூரின் வேலைபாடுகளையும் வங்காளதேசத்தின் கலைகளையும் பிரபலப்படுத்தியதற்காக வங்காளதேசத்தின் சயாநவுட் என்ற கலாச்சார அமைப்புக்கு வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டுக்கான விருது பிரபல சிற்பக்கலைஞர் திரு. ராம் வஞ்சி சுதாகருக்கு வழங்கப்பட்டது.
கலாச்சார நல்லிணக்கத்திற்காக தாகூர் விருது வழங்குவதை ரவீந்திர நாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதில் ஒரு கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் சான்றிதழ், விருது மற்றும் தனித்துவம் வாய்ந்த கலாச்சார கைவினை பொருள் அல்லது கைத்தறி பொருளும் பரிசாக வழங்கப்படுகிறது.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1565173)
வருகையாளர் எண்ணிக்கை : 222