தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் கர்னல் ரத்தோர் தலைமையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவுகளுக்கான முதல் வருடாந்திர மாநாடு
Posted On:
13 FEB 2019 4:26PM by PIB Chennai
புதுதில்லியில், இன்று விஞ்ஞான் பவனில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக பிரிவுகளுக்கான முதல் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (தனிப்பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டுத் துறை இணையமைச்சர் கர்னல் ராஜ்ய வர்தன் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் போது ஊடக பிரிவுகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. தினந்தோறும் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஊடகப் பிரிவுகளுக்கு இடையே ஒத்திசைவு இருக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும். தொடர்பியலுக்கான நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர் கர்னல் ரத்தோர், இந்திய தகவல் பணி அலுவலர்களின் வேலையை பாராட்டினார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய அமைச்சர், அரசின் முக்கிய அமைச்சகங்களில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார். இந்திய தகவல் பணி அலுவலர்கள் தங்களின் பணியை மேலும் சிறப்பாக செய்ய தொலை நோக்கு இலக்குக்கான ஈடுபாட்டுடன் பணியைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மாறி வரும் தொடர்பியல் யுகத்தில் நவீன தொழில்நுட்பங்களை புதிய கருவிகளுடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். அடித்தட்டு மக்களை சென்றடையும் வகையில் ஊடகப் பிரிவுகள் பணிபுரிவது சவாலானது என்றும் முதல் நிலை அரசு சார்ந்த தகவல்களை பிராந்திய மொழிகளில் கொண்டு செல்ல வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்திய தகவல் பணி பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சமீபத்திய முடிவைப் பாராட்டிய அமைச்சர், அறிமுக நிலை மற்றும் பணியில் இருக்கும் பொழுதும் தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்கான தேவை குறித்து பேசினார்.
இம்மாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் திரு.அமீத் கர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஊடகப் பிரிவுகளில் பணிபுரியும் 125-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் பங்கேற்றனர்.
***
வி.கீ./அரவி/ரேவதி
(Release ID: 1564269)
Visitor Counter : 194