தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்படத் திருட்டு மற்றும் பதிவு உரிமை மீறலை சமாளித்தல்

1952 திரைப்பட சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும்

प्रविष्टि तिथि: 06 FEB 2019 9:41PM by PIB Chennai

1952 திரைப்பட சட்டத்தை திருத்தி, 2019 திரைப்பட சட்ட  திருத்த மசோதாவை, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த  மசோதா, திரைப்படத் திருட்டை சமாளிக்கும் வகையில், அனுமதியற்ற கேமரா மூலமான திரைப்படப் பதிவு மற்றும் திரைப்பட நகல் எடுத்தல் ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கும் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

விவரங்கள்:

   திரைப்படத் திருட்டுத்  தொல்லையை சமாளிப்பதற்கான சட்டத்திருத்தம் கீழ்கண்டவற்றுக்கு  வகை செய்கிறது.

  • புதிய பிரிவு  6AA சேர்க்கப்பட்டு  அதன்படி அனுமதியற்ற திரைப்பட பதிவுகள் தடை செய்யப்படுகின்றன.
  • பிரிவு  6AA மீறுபவர்களுக்கு  தண்டனை வழங்க பிரிவு  7 திருத்தம்  பயன்படுகிறது.  இந்த திருத்தத்தின்படி பிரிவு  6 AA-யை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்த உத்தேசத் திருத்தங்களை அடுத்து திரைப்படத் தொழிலின் வருவாய் பெருகும், வேலைவாய்ப்புகள் கூடுதலாக ஏற்படும், இந்திய நாட்டின் அறிவுசார்  சொத்துக்கள் கொள்கையின் முக்கிய நோக்கம் நிறைவேறும், திரைப்படத் திருட்டிலிருந்து விடுதலை கிடைக்கும், ஆன்லைன் பொருளடக்க மீறல்கள் தடுக்கப்படும்.

பின்னணி:

   திரைப்படத் திருட்டு மற்றும் கேமரா மூலம் திரைப்படங்களைப் பதிவு செய்தல் ஆகியவற்றைத் தடுக்க சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு திரைப்படத்துறையினர் நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.  2019-ல் ஜனவரி 19-ம் தேதி மும்பையில் இந்திய சினிமாவின்  தேசிய அருங்காட்சியக திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, திரைப்படத் திருட்டு, அவற்றை கேமரா மூலம் பதிவு செய்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, தற்போது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த விஷயத்தை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வந்துள்ளது.         

 


(रिलीज़ आईडी: 1563111) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu , Kannada