விண்வெளித்துறை
இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
06 FEB 2019 11:44AM by PIB Chennai
இந்தியாவின் புதிய தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து இன்று (06.02.2019) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏரியான் 5 விஏ-247 செலுத்து வாகனம், ஃபிரெஞ்ச் கயானாவில் உள்ள கவ்ரு ஏவுதளத்திலிருந்து, இன்று அதிகாலை இந்திய நேரப்படி மணி 2.31-க்கு இந்தியாவின் ஜிசாட்-31 மற்றும் சவுதி நாட்டின் புவி நிலை செயற்கைக்கோள் 1-ஹெல்லாஸ் சாட் 4 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது.
42 நிமிடங்களுக்குப் பிறகு ஏரியான் செலுத்து வாகனத்தின் 5-வது நிலையிலிருந்து ஜிசாட்-31 பிரிந்து சென்று புவி நிலை மாற்று நீள் வடிவ சுற்றுப்பாதையில் வெளியே விடப்பட்டது. இந்த சுற்றுப் பாதையின் குறுகிய தூரம் 250 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 35,850 கிலோ மீட்டராகவும் பூமத்திய ரேகையுடன் இதன் கோணம் 3 டிகிரியாகவும் அமைந்துள்ளது.
2536 கிலோ எடையுள்ள ஜிசாட்-31, புவிநிலை சுற்றுப்பாதையிலிருந்து கேயுபாண்ட் டிரான்ஸ்பாண்டர் திறனை அதிகப்படுத்தும். இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே விண்ணில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் செயல்பாட்டு சேவைகளின் தொடர் நிலைக்கு உதவியாக அமையும். ஜிசாட்-31 இஸ்ரோவின் முந்தைய செயற்கைக்கோள் வரிசைகளான இன்சாட்/ஜிசாட் வரிசை பாரம்பரியத்தைக் கொண்டது.
ஜிசாட்-31 மாறி அமையும் அதிர்வு எண் கொண்ட பிரிவுக்கான தனித்தன்மை வாய்ந்த சேவையை வழங்கும் என்றும், இந்தியாவின் முக்கிய நிலப்பரப்புக்கும் அதன் தீவுகளுக்கும் இது தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் என்றும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்தார்.
டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் ஏடிஎம், பங்கு பரிவர்த்தனை நிலையங்கள், டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, மின்னணு ஆளுகை செயலிகள் ஆகியவற்றுக்கான விசாட் இணைப்புகளையும் இந்த ஜிசாட்-31 செயற்கைக்கோள் வழங்கும் என்று டாக்டர் சிவன் தெரிவித்தார். மேலும், அநேக தொலை தொடர்பு சேவைகளுக்கும், பெரிய அளவிலான தரவு மாற்றங்களுக்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படும் என்று அவர் கூறினார்.
***********
(रिलीज़ आईडी: 1562812)
आगंतुक पटल : 396