நிதி அமைச்சகம்

2019-20-ல் நிதிப் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது

Posted On: 01 FEB 2019 1:44PM by PIB Chennai

2019-20-க்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  சென்ற நிதியாண்டில் இது 3.3 சதவீதமாக பராமரிக்கப்பட்டது. 

இருப்பினும், விவசாயிகளின் வருவாய்க்கு உதவியாக இருக்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டு, அடுத்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு செய்யப்பட்டு இருப்பதால் நிதிப்பற்றாக்குறை சற்று அதிகரித்துள்ளது.  இதனை நீக்கிவிட்டு பார்த்தால், சென்ற நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதத்திற்குக் குறைவாகவும், வரும் நிதியாண்டில் 3.1 சதவீதத்திற்குக் குறைவாகவும்  இருக்கும் என்று நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

  • ஒட்டுமொத்த வருவாய்க்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ. 25,52,131 கோடி.
  • நேர்முக வரிகள் எதிர்பார்ப்பு ரூ. 13,80,000 கோடி.
  • மறைமுக வரிகள் எதிர்பார்ப்பு ரூ.11,66,188 கோடி.
  • ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்பதால், மறைமுக வரியில் உயர்வு ஏற்படும்.
  • வரியல்லாத வருவாய் மதிப்பீடு ரூ.2,72,647 கோடி.
  • மொத்த செலவினம் மதிப்பீடு ரூ. 27,84,200 கோடி.
  • மூலதன செலவு மதிப்பீடு ரூ. 3,36,292 கோடி.
  • மத்திய அரசு ஆதரவு திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 3,27,679 கோடி.
  • ஷெட்யூல்டு வகுப்பு நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 76,801 கோடி.
  • பழங்குடி மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.50,086 கோடி.
  • பொதுத்துறை பங்குகள் விற்பனை இலக்கு ரூ. 90,000 கோடி.
  • கடன் இல்லாத மூலதன வரவு எதிர்பார்ப்பு ரூ. 1,02,508 கோடி.
  • மொத்தக் கடன் எதிர்பார்ப்பு ரூ. 7,03,999 கோடி.

 

********


(Release ID: 1562289)
Read this release in: Marathi , Bengali , English