நிதி அமைச்சகம்

சுமார் 12 கோடி சிறு விவசாயிகள் பயனடையும் பிரதமரின் விவசாய நல நிதித் திட்டம்

प्रविष्टि तिथि: 01 FEB 2019 1:47PM by PIB Chennai

சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளின் வருவாயை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு பிரதமரின் விவசாய நல நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தின்படி, விவசாயம் செய்வதற்கு தகுதியான இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள  வருவாய் குறைந்த விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் நேரடியாக வருவாய் உதவி அளிக்கப்படும்.  இந்த நிதி ரூ. 2,000 வீதம் 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.  இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.  இதன்மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சென்ற ஆண்டு டிசம்பர் 1 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.  இந்த திட்டத்திற்கான முதல் தவணைத் தொகை இந்த நிதியாண்டிலேயே வழங்கப்பட்டு விடும்.  இந்த திட்டத்திற்கான ஆண்டுச் செலவு ரூ.75,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம்

பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கவும் “ராஷ்டிரிய காமதேனு ஆயோக்” அமைக்கப்படவுள்ளது.  இந்த அமைப்பு பசுக்களுக்கான சட்டங்களையும், நலத்திட்டங்களையும் கவனித்துக் கொள்ளும்.

மீன்வளத்துறை

மீன்வளத் துறை பிரிவின் மேம்பாட்டிற்காக தனியானதொரு மீன்வளத்துறையை உருவாக்க  அரசு முடிவு செய்துள்ளது. 

பயிர்க் கடன்கள்

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் பயிர்க் கடன்களை திரும்பச் செலுத்த முடியாத நிலை உள்ளது.  இவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கும் ஓராண்டு காலத்திற்கு இரண்டு சதவீத வட்டி குறைப்பு செய்யப்படுகிறது. தற்போது இதிலிருந்து, மாற்றம் செய்யப்பட்டு விவசாயக் கடன்கள் திரும்பக் கிடைக்கும் காலம் முழுமைக்கும் இரண்டு சதவீத வட்டிக்குறைப்பு செய்வதோடு முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு 3 சதவீத ஊக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

இந்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்..

***********


(रिलीज़ आईडी: 1562284) आगंतुक पटल : 390
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Gujarati , Malayalam