கலாசாரத்துறை அமைச்சகம்

தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகத்தை நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 29 JAN 2019 10:24AM by PIB Chennai

தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் நொய்டாவில் நாளை திறந்து வைக்கிறார்.

கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் தொடர்பான துறைகளில் பயிற்சி மற்றும் ஆய்வுகளை நடத்தும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் விளங்குகிறது. கலை வரலாறு, பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக மேலாண்மை போன்ற துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரின் தலைமையில் இயங்கும் இந்நிறுவனத்தில் (i) தொல்லியல் (ii) தொல் எழுத்துக் கலை (iii) கட்டுமானப் பாதுகாப்பு மற்றும் (iv) கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மேலாண்மை போன்ற கல்விப் படிப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

****


(Release ID: 1561757) Visitor Counter : 187