பிரதமர் அலுவலகம்

ஒடிசா & கிழக்கு இந்தியாவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

பிரதமர் பாலங்கிர் பயணம்; ஒடிசாவில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
ஜர்சுகுடா பன்னோக்கு சரக்கு போக்குவரத்து முனையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது
போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க 6 ரயில்வே திட்டங்கள் தொடக்கம்
பாலங்கிர் & பிச்சுபாலி இடையே 15 கி.மீ புதிய ரயில்பாதை தொடங்கிவைக்கப்பட்டது

Posted On: 15 JAN 2019 3:09PM by PIB Chennai

   பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (15.01.2019) ஒடிசா மாநிலம் பாலங்கிர் சென்றார். ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த அவர், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    இன்று (15.01.2019) காலை ராய்ப்பூர் விவேகானந்த் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர், பின்னர் அங்கிருந்து பாலங்கிர் புறப்பட்டுச் சென்றார். பாலங்கிரில், ஜர்சுகுடா பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காவை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்கா, ஜர்சுகுடாவை, இந்த பிராந்தியத்தின முக்கிய சரக்குப்  போக்குவரத்து வளாகமாக மாற்றும். ரயில் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரூ.115 கோடி மதிப்பீட்டிலான பாலங்கிர் – பிச்சுபாலி ரயில் பாதையையும் திரு மோடி தொடங்கி வைத்தார்.

    ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, கடந்த 3 வாரங்களில் 3-வது முறையாக ஒடிசா வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். பாலங்கிர் ரயில்வே திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “ கிழக்கு இந்தியா மற்றும் ஒடிசாவின் வளர்ச்சிக்காக, தொடர் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றை நிறைவேற்றும் ஒரு முயற்சியாக பாலங்கிரில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்றார். 

   நாகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். பார்பாலி-துங்காரிபாலி,  மற்றும் பாலங்கிர் – தியோகான் இடையேயான இரட்டை ரயில்பாதை மற்றும் ஜர்சுகுடா – வைசியநகரம் மற்றும் சம்பல்பூர் – ஆங்குல் இடையே 813 கி.மீ. தொலைவுக்கான ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டத்தையும்  அவர் தொடங்கி வைத்தார். ஒடிசாவின் சோனிப்பூரில், ரூ.15.81 கோடி செலவில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கான நிரந்தர கட்டடத்திற்கும்  பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  போக்குவரத்து மற்றும் கல்வி வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “ மனிதவள மேம்பாட்டிற்கு கல்வி வழிவகுக்கும். ஆனால் அது போன்ற வளங்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கு போக்குவரத்து வசதியும் அவசியம். இது மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதுடன் கனிம வளங்களை தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் எடுத்துச் செல்லவும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தொலைதூரத்தில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும், ஒடிசா மக்களின், ‘வாழ்க்கையை எளிதாக்கவும் உதவிகரமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

    கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க தாம் உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நமது கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்தி, மாநிலத்தின் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் என்றார். காந்தஹராடியில் உள்ள  நிலமாதவ்  மற்றும் சித்தேஷ்வர் (பவுத்த) கோவில்களின் புனரமைப்பு மற்றும் மறுநிர்வாணப் பணிகள் குறித்து அவர்  மகிழ்ச்சி  தெரிவித்தார்.  பாலங்கிரில் உள்ள ராணிப்பூர் ஜரியல் குழும நினைவுச் சின்னங்கள் & காளஹந்தி ஆசர்கர் கோட்டை புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளையும் திரு மோடி தொடங்கி வைத்தார்.

------------------

விகீ /எம் எம் / கீதா



(Release ID: 1560138) Visitor Counter : 125