பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாளை (ஜனவரி 15, 2019) கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

கொல்லம் புறவழிச் சாலை என்.எச்.-66ஐ பிரதமர் திறந்து வைக்கிறார்
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பிரதமர் வழிபடுகிறார்.

Posted On: 14 JAN 2019 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுக்கு நாளை (ஜனவரி 15, 2019) பயணம் மேற்கொள்கிறார்.

கொல்லத்தில் பிரதமர் கொல்லம் புறவழிச் சாலை என்.எச்.-66ஐ திறந்து வைக்கிறார். இது 13 கிமீ நீளம் கொண்ட இருவழிப்பாதையாகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 352 கோடி. 1540 மீட்டர் நீளமுடைய அஷ்டமுடி ஏரி மேல் செல்லும் 3 முக்கிய பாலங்களும் இதில் அடங்கும். இத்திட்டம் ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் இடையேயான பயண நேரத்தை குறைத்து, கொல்லம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

திருவனந்தபுரத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பத்மநாபசாமி கோவிலுக்கு செல்வார். பார்வையாளர்கள் வசதிக்கான சில திட்டங்களை தொடங்கும் வகையில் பிரதமர் அதற்கான  கல்வெட்டை திறந்துவைப்பார்.  
பிரதமர், கொல்லத்திற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசு முறை பயணம் இது. இந்த நகரத்திற்கு முதல் முறையாக பிரதமர் 2015 டிசம்பரில் பயணம் மேற்கொண்டார், அப்போது ஆர். சங்கர் உருவ சிலையை திறந்துவைத்தார். பின்பு 2016 ஏப்லில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு கொல்லத்திற்கு வந்தார்.

****

வி.கீ/ஸ்ரீ.

 

(Release ID: 1560068) Visitor Counter : 146