பிரதமர் அலுவலகம்

பிரதமர் மோடி ஜனவரி 05, 2019 அன்று ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவுக்குப் பயணம்

Posted On: 04 JAN 2019 6:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 05, 2019 அன்று ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 

 

ஜார்க்கண்டில் வடக்கு கோயல் (மண்டல் அணை) புனரமைப்புத் திட்டம்,  கன்ஹார் ஆற்றிலிருந்து குழாய் வழி பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டினைப் பிரதமர் திறந்து வைப்பார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் இ-கிரகப்பிரவேசத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்.  அங்கு திரண்டிருக்கும் பொது மக்களிடையே அவர் உரையாற்றுவார்.

 

இதன் பிறகு, பிரதமர் ஒடிசாவுக்கு புறப்பட்டுச் செல்வார். பாரிபடாவில் இந்திய எண்ணெய்க் கழகத்தின் பாலாசோர்-ஹால்டியா-துர்காபூர் பிரிவில் உள்ள குழாய் மூலமான சமையல் எரிவாயுத் திட்டத்தையும் பாலாசோரில் பொருள் போக்குவரத்துக்கான பன்முக முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.    

 

ஹரிப்பூர்கட், பழங்கால கோட்டையில் உள்ள ரசிகா ரே கோயில் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பணிகள் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டைப் பிரதமர் திறந்து வைப்பார்.   நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பலவற்றுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் அவர் 6 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் திறந்து வைப்பார்.  டாடா நகரில் இருந்து பதம்பஹாருக்கு இரண்டாவது பயணிகள் ரயில் வண்டியையும் அவர் கொடியசைத்து அனுப்பி வைப்பார். 

 

பாரிபடாவில் திரண்டிருக்கும் மக்களிடையேயும் அவர் உரையாற்றுவார். 

***************

விகீ/எஸ்எம்பி/வேணி

 



(Release ID: 1558764) Visitor Counter : 112