இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நடப்பாண்டு சாதனைகள்: மத்திய இளைஞர் நலத் துறை

Posted On: 10 DEC 2018 11:43AM by PIB Chennai

நமது நாட்டின் மக்கள் தொகையில் மிகவும் துடிப்பான துடிப்பான மற்றும் சக்தி வாய்ந்தவர்கள்ளைஞர்கள். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய இளைஞர் நலத் துறை,  இவர்களுக்கு அதிகாரமளிக்கும் தேசிய திட்டம் மூலம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மத்திய இளைஞர் நலத் துறையின் பல்வேறு தொடர் முயற்சிகளால், தேசத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.

மத்திய இளைஞர் நலத் துறையின் திட்டங்களை மறுசீரமைத்தல்

இத்துறையின் பல்வேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று முன்னோடி திட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு 01.04.2016 ஆம் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  1. இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் தேசிய திட்டத்தின் கீழ் 8 திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள.
  2. நாட்டு நலப்பணித் திட்டம்
  3. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்

2018-19 ஆம் ஆண்டில் இந்த திட்டங்களில் எட்டப்பட்ட முக்கிய சாதனைகள் கீழ்வருமாறு:

  1. இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் தேசிய திட்டம்

அ)   நேரு யுவ கேந்திரா சங்கதன்:

நேரு யுவ கேந்திரா சங்கதனில், நாடு முழுவதும் 1.68 லட்சம் இளைஞர் சங்கங்களில் 36.22 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் நமது நாட்டு இளைஞர்களின் ஆளுமை ண்புகளை மேம்படுத்தி, அவர்களை தேசத்தை உருவாக்கும் பணியில் பங்கேற்க செய்கின்றனர்.

நடப்பு ஆண்டில் நேரு யுவ கேந்திரா சங்கதன் செய்துள்ள முக்கிய சாதனைகளில் சில:

  • 8.47 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன
  • 13,432 யூனிட் ரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது.
  • 1,764 திறன் மேம்பாட்டு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள. இதில் 51,508 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • 1694 இளைஞர் சங்க மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள. இதில் 83,514 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • வட்டார அளவில் 1336 விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 1,77,688  இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நாட்களில் 8126 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள. இதில் 11,05,136 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • 230 மாவட்ட அளவிலான இளைஞர் மாநாடுகள் நடைபெற்றுள்ள. இதில் 18,45,024 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • நாடு முழுவதும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் 38,356 இடங்களில் நடைபெற்ற. இதில் 23.68 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • 1,15,437 இடங்களில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள. இதில் 12,07,686 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • நீர் பாதுகாப்பு - 13,757 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள. இதில் 3.9 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் 2430 புதிய நீர் நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்திரா தனுஷ் திட்டம் -  59,961 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியில் 2.6  லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர்.
  • கிழக்கு சம்பாரனில் தூய்மை இந்தியா இயக்க நிகழ்ச்சி – 300 இளைஞர்கள் பங்கேற்றனர்.
  • தூய்மை கங்கா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட. மரக்கன்று நடும் வாரத்தில் 82,819 மரக்கன்றுகள் நடப்பட்ட.
  • ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் மூலம் 15 அண்டை மாநிலங்களுக்கு இடையே மாநிலங்கள் அளவிலான இளைஞர்கள் பரிமாற் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை நாடு முழுவதும் நடைமுறைபடுத்துவதில் நேரு யுவ கேந்திரா முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் பங்கு வெகுவாக பாராட்டப்பட்டது.
  • வலிமைக்கான திருவிழா, 2018 (Parakram Parv, 2018) – நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதலின் (surgical strike) இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1786-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
  • ஆரோக்கிய மேளா நேரு யுவ கேந்திரா சங்கதனின் உதவியோடு 25-வது சிறப்பான ஆரோக்கியம் மேளா புது தில்லியில் நடைபெற்றது.

ஆ)   சர்வதேச ஒத்துழைப்புகள்:

இளைஞர்கள் இடையே சர்வதேச கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்காகவும் இளைஞர் மேம்பாடு குறித்த பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும், மத்திய இளைஞர்கள் நலன் துறை பல்வேறு நாடுகளுடன் சர்வதேச இளைஞர்கள் பரிமாற்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் இருந்து 300 இளைஞர்கள் ஏழு நாடுகளுக்கு சென்றுள்ளனர். அதேபோல், ஐந்து நாடுகளை சேர்ந்த 202 இளைஞர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.  

 

இ) •         வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கான தேசிய திட்டம்:

  • வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசு/அரசு சாரா அமைப்புகளுக்கு உதவி புரிய தேசிய இளைஞர் மற்றும் வளரிளம் பருவத்தினர் மேம்பாட்டு திட்டமும், மற்ற திட்டங்களும் தேசிய இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள.
  • 2018-19 நிதி ஆண்டில், 5 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • அயல்நாட்டிற்கு இடம்பெயர்ந்த இந்திய இளைஞர்கள் தினம் ஜனவரி 21, 2019 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாடப்பட உள்ளது.
  • 6-வது வட கிழக்கு இளைஞர்கள் திருவிழா, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் 2017, நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்றது.
  • வாழ்நாள் சாதனை விருதும், நிலம், நீர், காற்றுவெளி ஆகியவற்றில் சாகசம் செய்ததற்காக 10 பேருக்கு டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது 2017 வழங்கப்பட்டது.
  1. நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.):

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள 42958 நாட்டு நலப்பணித் திட்டக் குழுக்களில் சுமார் 4.13 மில்லியன் மாணவர்கள் உறுப்பினர்களாக பதிவுசெய்துள்ளனர்.  

நாட்டு நலப்பணித் திட்டக் குழுக்கள் நடப்பாண்டில் செய்துள்ள சாதனைகளில் சில:

  • 1.4.2016  ஆம் தேதி முதல் நாட்டு நலப்பணித் திட்டம் மத்திய பிரிவுத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது, இதனால் நாட்டு நலப்பணித் திட்டத்திற்காக பெரும்பாலான நிதி  மத்திய அரசால் வழங்கப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்று ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள், சமூக கூடங்கள், முதியோர் இல்லங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், சிலைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போட்டிகளும் நடத்தப்பட்ட.
  • 100 மணி நேரம் நடைபெற்ற தூய்மை இந்தியா விளக்க நிகழ்ச்சியில் சுமார் 27000 என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றனர்.
  • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் சுமார் 25.78 லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றனர்.
  • 18,79,675 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள.
  • 1,91,581 யூனிட் ரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது.
  • 9402 சுகாதார/கண்/நோய்தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள. இதில் 464622 என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • 38,710 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்/பேரணிகள் நடைபெற்றுள்ள. இதில் 25.89 லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • 62.50 லட்ச மணி நேர உழைப்பு தானத்தை என்.எஸ்.எஸ். மாணவர்கள் செய்துள்ளனர்.
  • 34,728 என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள.
  • நாடு முழுவதும் என்.எஸ்.எஸ். குழுக்களால் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் பண பரிவத்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள.
  1. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு நிறுவனம்:
  • இந்த ஆண்டில், 162 பயிற்சி / திறன் மேம்பாடு குறித்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள. இதில், என்.எஸ்.எஸ். பயிற்சி அலுவலர்கள் உள்ளிட்ட 6,663 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 35 பயிற்சியார்களுக்கான பயிற்சியும் அடங்கும். இதன் மூலம் 1023 நேரு யுவ கேந்திரா சங்கதன் பணியாளர்களும், என்.எஸ்.எஸ். பயிற்சி அலுவலர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • இளைஞர் மேம்பாட்டு குறியீடு:

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு நிறுவனம், தனது தேசிய இளைஞர் வள மையத்தின் ஆவணப்படுத்துதல் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு மற்றும் அறிக்கை – 2017ஐ வெளியிட்டது. இளைஞர் மேம்பாட்டு துறையில் உள்ள முக்கிய பங்குதாரர்களுக்காக இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு – 2017 குறித்த மண்டல  பரப்புரை பயிலரங்குகள் குவஹாத்தி, புது தில்லி மற்றும் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.

  • ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோனவரி தொகுதி ஜே.கே. 11-ற்காக கணினி முறையிலான தொகுதி மேலாண்மை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.எஸ்.எஸ். திட்ட பயிற்சி அலுவலர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சர்வதேச திட்டங்கள்

  • மாலத்தீவு இளைஞர்கள் குழுவின் இந்திய பயணம்
  • ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் ஊரக மேம்பாடு குறித்த முது நிலை பட்டய படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு மையம் – ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி சுற்றுலாவினை ஏற்பாடு செய்தன.
  • வங்காளதேசத்தில் உள்ள ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வருகை.
  • தொழில்முனைவோர் மற்றும் ஊரக வளர்ச்சி: 19 நாடுகளைச் சேர்ந்த குழுவினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.
  • இலங்கை இளைஞர் பரிமாற்ற திட்டக் குழு, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வருகை.
  • இந்தியா மற்றும் இலங்கை இடையேயான சர்வதேச இளைஞர் பரிமாற்று திட்டம்.
  • பாலினம் மற்றும் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு.
  • இலங்கை மாணவர் குழுவிற்கு இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி.

பிற சாதனைகள்:

  • பல்வேறு பல்கலைக்கழகங்களில்/நிறுவனங்களில் நடைபெறும் 18 பெரிய மற்றும் 8 சிறிய ஆய்வுத் திட்டங்களுக்கு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் நிதி வழங்கியுள்ளது.
  •  கல்விப் பிரிவுளைப் பொருத்தவரை, கல்வி ஆண்டு 2017-18 மற்றும் 2018-19-ல் சுமார்  182 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். இதில் அனைத்து மாநிலத்தவர்களும் உள்ளனர்.
  • ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்துடன் இணைந்து ஆடை உற்பத்தி மற்றும் தொழில்முனைவோர், மற்றும் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றில் தொழில்பயிற்சி இளங்கலை கல்வி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில், நாட்டில் உள்ள 19 ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் சுமார் 663 மாணவர்கள் பயில்கின்றனர்.

************

வி.கீ/ஸ்ரீ


(Release ID: 1558042) Visitor Counter : 1275


Read this release in: Kannada , English , Hindi , Marathi