குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
நடப்பாண்டு சாதனைகள்: குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் தூய்மை இந்தியா இயக்கம்
प्रविष्टि तिथि:
19 DEC 2018 3:13PM by PIB Chennai
இந்தியாவில் முழுமையான துப்புரவுக்கான முயற்சிகளை துரிதப்படுத்தவும், பாதுகாப்பான துப்புரவை முன்னெடுத்துச் செல்லவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தூய்மை என்பது அனைவரின் பொறுப்பு
அனைத்துத் துறைகளிலும் தூய்மை இந்தியா இயக்கத்தில் சாதனை படைக்க குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் தூய்மை இந்தியாவிற்கான பொறுப்போடு அனைத்து நடவடிக்கைகளுக்கும், முன்முயற்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.
தூய்மை இருவார நிகழ்ச்சி
தூய்மை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் அனைத்து மத்திய அமைச்சகங்களையும், துறைகளையும் சம்பந்தப்படுத்த விளையும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட தூய்மை இருவார நிகழ்ச்சிக்கான ஊக்கமாகும்.
நமாமி கங்கா
நமாமி கங்கா திட்டம் நீர் வள அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் அமைச்சகங்களுக்கு இடையேயான இந்த முன்முயற்சி கங்கை கரையில் உள்ள கிராமங்களை திறந்தவெளி கழிப்பறைகளிலிருந்து விடுவிப்பது மற்றும் திட, திரவ பொருள் மேலாண்மையில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாகும்.
தூய்மை நடவடிக்கை திட்டம்
வருடாந்திர திட்டமிடுதல் மற்றும் துப்புரவு செயல்பாடு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்ய முதல் முறையாக அனைத்து மத்திய அமைச்சகங்களின் தலைமையில் தூய்மை மற்றும் தூய்மை நடவடிக்கை திட்டம் அமைச்சகங்களுக்கு இடையேயான திட்டமாக நிறைவேற்றப்படுகிறது.
தூய்மை தன்மை வாய்ந்த இடங்கள்
பிரதமரின் ஊக்குவிப்புடன் நாட்டில் உள்ள பாரம்பரியம், சமயம் மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த 100 இடங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான பன்முகத்தன்மை கொண்ட முன்முயற்சியை குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
தூய்மைக்கான சேவை (2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை)
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு பிறகான அடுத்தகட்டமாக மக்கள் இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்த 17 இடங்களில் தூய்மைக்கான சேவை 2018 செப்டம்பர் மாதம் 15-ந் தேதியன்று காணொலி உரையாடல் மூலமாக பிரதமர் 2-வது பதிப்பை தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு உலகெங்கிலும் உள்ள துப்புரவு அமைச்சர்கள் மற்றும் இத்துறை நிபுணர்களின் கூட்டத்தை நடத்தியது. புதுதில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்த இம்மாநாட்டில் 67 நாடுகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்வஜல்
நித்தி ஆயோக் அமைப்பால் அடையாளம் காணப்பட்ட 117 ஆர்வமிக்க மாவட்டங்களில் சமுதாயத்தின் கோரிக்கையோடு பரவலாக்கப்பட்ட, சூரிய சக்தியால் இயக்கப்படும் குறிப்பிட்ட கிராமத்தில் சிறிய அளவிலான பணித்திறன் திட்டமான ஸ்வஜல், குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று குடியரசுத் துணைத் தலைவர் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினத்தையொட்டி இத்திட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் தொடங்கி வைக்கப்பட்டது.
*******
(रिलीज़ आईडी: 1557395)
आगंतुक पटल : 217