பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஆண்டு இறுதி அறிக்கை 2018 – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

Posted On: 12 DEC 2018 10:59AM by PIB Chennai

பெட்ரோலியம் மற்றும்  இயற்கை வாயு அமைச்சகம் தனது துறையை சீரமைக்கவும்,  செயலாக்கத்தை அதிகரிக்கவும்,  மாறுதலை ஏற்படுத்தவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.  அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, ஆய்வு மற்றும் உற்பத்தி, சுத்திகரிப்பு, சந்தைப்படுத்துதல். இயற்கை வாயு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பலன்களை பெற்றுள்ளது.

ஆய்வு மற்றும் உற்பத்தி

பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோ கார்பன் பிரிவுக்கு உத்வேகம் அளிக்கும் முயற்சியாக முக்கிய கொள்கை ரீதியாக அரசு பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளது. கொள்கை சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் வருமாறு:

  1. ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமம் தொடர்பான கொள்கை (எச்.இ.எல்.பி.) திறந்த பரப்பளவு உரிமம் தொடர்பான கொள்கை (ஓ.ஏ.எல்.பி.) உற்பத்தி பகிர்மான ஒப்பந்த நிர்வாகத்திலிருந்து வருவாய் பகிர்மான ஒப்பந்த நிர்வாகத்திற்கு மாறியிருப்பது எளிதாக வணிகம் புரிதல் கொள்கையை அடிப்படையாக கொண்டதாகும்.

ஓ.ஏ.எல்.பி.யின் சுற்று-1 55 பிளாக் 59,282 சதுர கிலோ மீட்டர் பகுதி 2018 அக்டோபர் 1-ல் ஒப்படைக்கப்பட்டது. ஓ.ஏ.எல்.பி. சுற்று-2 14 பிளாக்குகள் வழங்கப்பட உள்ளது.

  1. எண்ணெய் மற்றும் எரிவாயுவை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை வரைவுப் பணி

உயர்த்தி திரும்ப பெறுதல் (இ.ஆர்.) மேம்படுத்தி திரும்ப பெறுதல் (ஜ.ஆர்.) ஒப்பந்தத்தில் அல்லாத ஹைட்ரோ கார்பன் (யு.எச்.சி.) உற்பத்தி வழிமுறைகள் / தொழில்நுட்பங்கள் நிதி ஊக்குவிப்புகளுடன் உற்பத்தியை மேம்படுத்தி தற்போதுள்ள துறைகளை மேம்படுத்துவது உள்நாட்டு ஹைட்ரோ கார்பன் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது  தொடர்பான கொள்கை வரைவுப் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  1. சிறிய கள கொள்கை (டிஎஸ்எப்), சுற்று-1 மற்றும் 2

தேசிய எண்ணெய் நிறுவனங்கள் (என்.ஓ.சி.எஸ்) செப்டம்பர் 2015 அன்று மத்திய அமைச்சரவை 69 சராசரியான களங்களுக்கு ஒப்புதல் அளித்தது. கண்டுபிடிக்கப்பட்ட சிறு கள கொள்கையின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப் பகுதிகள் அனைத்தும் புதிய வருவாய் பகிர்வு மாதிரி நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்டது. ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான வசதிகள் விரைவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1. மதிப்பீடு மேற்கொள்ளப்படாத பகுதிகளில் தேசிய நிலநடுக்க  திட்டம்

மதிப்பீடு செய்யப்படாத பகுதிகளில் அனைத்தும் 2டி நிலநடுக்க ஆய்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கத் திட்டம் அக்டோபர் 12, 2016 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2டி நிலநடுக்க ஆய்வு புள்ளி விவரங்கள் சேகரிப்பு செயல்முறை மற்றும் பயன்பாடு (ஏ.பி.ஐ.) 48,243 லைன் கிலோ மீட்டர் எல்.கே.எம்.

  1. உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கை வரைவு திட்டம்

இந்த கொள்கையின் கீழ் அரசு ஆய்வுக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தும் மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட செயல்பாட்டில் உள்ள என்இஆர் பிளாக்குகளுக்கு ஓராண்டும் நீடிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் என்இ.ஆரின் கீழ் எதிர்காலத்தில் உற்பத்தியாகும் இயற்கை வாயுவிற்கு சுதந்திரமாக விலை நிர்ணயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

  1. ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்த மறுமதிப்பீடு

ஒய்.என்.ஜி.சி., ஓ.ஐ.எல் மற்றும் டி.ஜி.எச். ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய பலமுனை குழு ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்த மதிப்பீட்டை மேற்கொண்டது.

  1. ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்த மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் செயல்பாட்டில் உள்ள உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்கள் (பி.எஸ்.சி.எஸ்) நிலக்கரி படுகை மீத்தேன் (சி.பி.எம்.) ஒப்பந்தங்கள் மற்றும் நியமன வளங்கள் குறித்த கொள்கை வரைவுத் திட்டம்

உரிமம் பெற்ற மற்றும் குத்தகை பகுதிகளில் உள்ள ஒப்பந்தகாரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களை தற்போதுள்ள பகுதிகளில் இயக்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கையின் கீழ் 72027 சதுர கிலோ மீட்டர் பகுதி உற்பத்தி பகிர்வு ஒப்பந்ததாரர்கள்வசமும் மற்றும் 5269 சதுர கிலோ மீட்டர் பகுதி நிலக்கரி பெட் மீத்தேன் ஒப்பந்தகாரர்வசமும் உள்ளன.

2. இயற்கை வாயு

இயற்கை வாயு தொகுப்பு

இயற்கை வாயுவை எரிவாயுவாக நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காகவும் எரிவாயுவை அடிப்படையாக கொண்ட பொருளாதார யுகமாக மாற்றவும் கூடுதலாக 13,500 கிலோ மீட்டர் தூர எரிவாயு குழாய் அமைக்கும் பணி, எரிவாயு தொகுப்பை நிறைவு செய்ய நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் முக்கிய எரிவாயு குழாய் திட்ட கட்டுமானப் பணிகள் பற்றிய விவரம் வருமாறு

  1. பிரதமர் உர்ஜா கங்கா திட்டம் (ஜகதீஷ்பூர் – ஹாடியா மற்றும் பொகாரோ – தம்ரா குழாய் பதிப்பு திட்டம் (ஜெ.எச்.பி.டி.பி.எல்.)

2655 கிலோ மீட்டர் தூர எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் ரூ.12,940 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 40 சதவீதம் மத்திய அரசு வழங்கும் முதலீட்டு மானியமாகும் (ரூ.5176 கோடி). இந்த திட்டத்தை டிசம்பர் 2020-ல்  முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  1. பாராவுணியிலிருந்து கவுகாத்தி வரை குழாய் பதிக்கும் திட்டம்

வடகிழக்கு பகுதிக்கு எரிவாயு தொகுப்பை நீட்டிப்பதற்காக 729 கிலோ மீட்டர் தூர குழாய் பதிக்கும் திட்டம்  பாராவுணையிலிருந்து கவுகாத்தி வரை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் (ஜெ.எச்.பி.டி.பி.எல்.) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

  1. வடகிழக்கு மண்டலம் எரிவாயு தொகுப்பு:

வடகிழக்கு பகுதி மாநிலங்களுக்கும் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கும் எரிவாயு தொகுப்பை மேலும் நீட்டிக்க கூட்டு நிறுவனம் ஒன்று இந்திர தனுஷ் எரிவாயு தொகுப்பு லிமிடெட் என்ற பெயரில் 10.08.2018 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறையின் 5 எண்ணெய்  நிறுவனங்களான ஐ.ஓ.சி.எல், ஓ.என்.ஜி.சி., ஜி.ஏ.ஐ.எல்., ஓ.ஐ.எல் மற்றும் என்.ஆர்.எல். ஆகியவை இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளது.

  1. கொச்சி – குட்டநாடு – பெங்களூரு – மங்களூரு குழாய் பதிக்கும் திட்டம் (கட்டம்-2)

கேல் நிறுவனம் 872 கிலோ மீட்டர் தூர குழாய் பதிப்பு திட்டத்தை 5550 கோடி ரூபாய் முதலீட்டில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மேம்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.

  1. எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- நாகப்பட்டினம்- மதுரை-தூத்துக்குடி (இ.டி.பி.பி.என்.எம்.டி.பி.எல்.)

இந்தியன் ஆயில் நிறுவனம் 1385 கிலோ மீட்டர் தூர குழாய் பதிக்கும் திட்டத்தை 4,497 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தி வருகிறது. இந்த குழாய் பதிக்கும் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாக செல்லும். இதன் ஒரு பகுதியில்  (எண்ணூர்- மணலி மற்றும் ராமநாதபுரம் – தூத்துக்குடி) குழாய் பதிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மீதமுள்ள பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளது.

  1. எரிவாயு தொகுப்பு திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இதர எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இவை படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.

2. நகர வாயு விநியோகம் (சி.ஜி.டி.) தொகுப்பு

இயற்கை வாயுவை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் அரசு நகர வாயு விநியோக தொகுப்பை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் முக்கியத்துவம் அளித்துள்ளது.  சிஜிடி   தொகுப்புகள் தூய்மையான எரிபொருளை (பி.என்.ஜி)  வீடுகளுக்கும் தொழில்துறை மற்றும் வர்த்தக  தொழில்கூடங்களுக்கும் விநியோகம் செய்வதையும், வாகனங்களுக்கு போக்குவரத்து எரிபொருளை (சி.என்.ஜி) விநியோகிக்கவும் உறுதி செய்துள்ளது. 2017 வரை  நாட்டின் மக்கள் தொகையில், 19 சதவீதம் பேரில், 11 சதவீதத்திற்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிஜிடி மேம்பாட்டின்  மூலம் 96 புவி சுற்றுவட்டப்பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.  சிஜிடி துறையை ஊக்குவிப்பதற்கு 9-வது சிஜிடி சுற்று 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க்ப்பட்டது. 86  புவிச்சுற்று வட்டப்பகுதிகளில் (ஜி.ஏ.எஸ்.)  22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 174 மாவட்டங்களில்38 நிறுவனங்கள், (பொதுத்துறை மற்றும் தனியார்)  இந்தச் சுற்றில் பங்கு பெற்றனர். இந்தச் சுற்று மூலம் மொத்தம் 406 ஒப்பந்தங்கள், 86 ஜி.ஏ.எஸ்.   சிஜிடி-யின் வளர்ச்சி  முழுமைப் பெறுவதற்கு ரூ.1,20,000 கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்த்துள்ளது.  வாயு மதிப்பீட்டுத் தொடர். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

திரவ இயற்கை வாயு (எல்.என்.ஜி.)

     நாட்டில் அதிகரித்து வரும் வாயுத் தேவையை எதிர்கொள்வதற்காக  பல்வேறு நிறுவனங்னள் திரவ இயற்கை வாயு-வை (எல்.என்.ஜி.) உலக வாயுச் சந்தைகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.  தற்போதுள்ள நான்கு எல் என் ஜி முனையங்கள் மூலம் எல் என் ஜி இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்த வாயுவை சீரமைக்கும் திறன்  சுமார் 26.3 எம் எம் டி பி ஏ (  95 எம்.எம்.எஸ்.சி எம்.டி). அளவுக்கு இந்த முனையங்களுக்கு உள்ளது. முனையங்கள் வாரியாக அவற்றின் விரிவாக்கத்திட்டம் வருமாறு

 

இடம்

உரிமையாளர்

திறன்

(எம்.எம்.டி.பி.ஏ)

தஹேஜ்

பி எல் எல்

15

ஹசீரா

ஷெல்

5

கொச்சி

பி எல் எல்

5

தாபோல் *

கெயில்

1.3

மொத்தத் திறன்  (எம்.எம்.டி.பி.ஏ)

26.3

 

(*திறன் 5 எம்.எம்.டி.பி.ஏ.  ஆனால் அலைதாங்கியில்லாத போது  இந்த முனையம்  1.3 எம்.எம்.டி.பி.ஏ  அளவில் தான் இயங்க முடியும்)

செப்டம்பர் 30, 2018 அன்று பிரதமர் முந்த்ரா எல் என் ஜி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ஜி.எஸ்.பி.சி.  எல்.என்.ஜி நிறுவனம் மேம்படுத்தியுள்ளதுஃ இந்த முனையம்  எல் என் ஜி-யின் ஐந்து எம்.எம்.டி.பி.ஏ. கையாளும் திறன் கொண்டது.கூடுதலாக இரண்டு புதிய எல். என் ஜி, முனையங்கள் ஐந்து எம்.எம். டி.பி.ஏ திறனுடன் எண்ணூரிலும் (தமிழ்நாடு) மற்றும் தம்ராவிலும் (ஒடிஷா) தற்போது மேம்படுத்துப்பட்டு வருகிறது.

 

3)  சந்தைப்படுத்துதல்

i) பிரதமரின் உஜ்வாலா யோஜனா ( பி எம் யு ஒய்)

      நாட்டில் பி பி எல் எரிவாயுவை பயன்படுத்தும்  வீட்டினருக்கு  தூய்மையான எல் பி ஜி சமையல் எரிவாயுவை வழங்குவதற்காக அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வைப்புத் தொகை செலுத்தாமல் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண்களுக்கு எல் பி ஜி இணைப்பு வழங்கப்பட்டு வந்த்து. பின்னர் இந்த எண்ணிக்கை எட்டு கோடியாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.12,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

   ஆரம்ப இலக்கான ஐந்து கோடி இணைப்புகள் முந்தைய இலக்கான  அதாவது மார்ச் 31, 2019-க்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் சமையல் எரிவாயு இணைப்பு (எல்.பி.ஜி) தேசிய அளவில் குறிப்பாக கிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது. 

ii) பஹல்

     சிறந்த நிர்வாகத்தைக் கருதி அரசு சமையல் எரிவாயு ( எல்.பி.ஜி) நகர்வோருக்கு பஹல் திட்டத்தின் மூலம் மானியம் வழங்குவதை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் இந்த முயற்சியின் மூலம் மானியம் பெறுவோரின்  எண்ணிக்கை  சீரமைக்கப்பட்டுள்ளது.

iii) தானியங்கி ஓ.எம்.சி. ஆர்.ஓ.எஸ்

  எரிபொருளின் தரத்திலும் எண்ணிக்கையிலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் முறைகேடான பரிமாற்றத்திற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையிலும் அமைச்சகம் ஓ.எம்.சி-க்கு இலக்கை அளித்துள்ளது நாடுமுழுவதும் அனைத்து ஆர்.ஓ.எஸ்-க்கும் தானாக இயங்கும் வகையில், 01.11.2018-ன் படி, 40350 ஆர்.ஓ.எஸ். (70%) நாடு முழுவதும்  தானியங்கி வகை செய்யப்பட்டுள்ளது.

iv) டிஜிட்டலில் பணம் செலுத்துதலை மேம்படுத்துதல்- எம்.ஓ.பி மற்றும் என் ஜி வழியாக

   சில்லறை விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் பணம் செலுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 20.11.2018-படி 100867 பி.ஓ.எஸ்.முனையங்கள் மற்றும் 92408 இ-வேலட் வசதி 53717 (98%) பெட்ரோல் பம்புகளுக்கு நாடு முழுவதிலும் வழங்கப்பட்டுள்ளது. 52959 சில்லறை விற்பனை நிலையங்கள் பி எச் ஐ எம்  யு பி ஐ-யுடன் இணைக்கப்பட்டுள்ளது

v) சில்லறை விற்பனையாளர் தேர்வு விளம்பரம் வெளியீடு

      சில்லறை விற்பனை நிலைய தொகுப்பை  ( பெட்ரோல் பம்ப்ஸ்) விரிவாக்கம் செய்வதை எண்ணெய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் எரிபொருள் தேவையைக் கருதி குறிப்பாக நெடுஞ்சாலைகள், வேளாண் பகுதிகள் மற்றும் தொழில்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதலாக சில்லறை விற்பனை நிலையங்கள் தொகுப்பு விரிவாக்கம் செய்து வேலை வாய்ப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முப்பது மாநிலங்களில் 55652  பகுதிகளில் விளம்பரங்களை வெளியிட்டு பெட்ரோல் பம்புகள் தொடர்பான  25.11.2018 அன்று விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

      முதன் முறையாக கணினி மூலம், விலைகுறியீடு குறித்து குலுக்கல் மூலம் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டன.  

4) சுத்திகரிப்பு நிலையம்

     நாடு முழுவதும் இயங்கி வரும் 23 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்  18 பொதுத்துறையிலும் 3 தனியார் துறையிலும் மீதம்  இரண்டு கூட்டுத்துறையிலும் உள்ளன.   இந்த சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த சுத்திகரிப்புத்திறன் 247.566 எம்.எம்.டி.பி..   எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் உள்நாட்டுத் தேவையில், நாடு தன்னிறைவை எட்டியிருப்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் போதுமான அளவு  பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது.

5) ஆட்டோ எரிபொருள் தொலைநோக்கு மற்றும் கொள்கை

  1. பி எஸ் – IV & பி எஸ் – VI எரிபொருள்கள் நாட்டில் அறிமுகம்
  1. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் 19.01.2015 தேதியிட்ட உத்தரவின்படி பி எஸ் – IV ஆட்டோ எரிபொருள்களை நாடு முழுவதும் 01.04.2017 முதல்  படிப்படிப்யாக அமலுக்கு கொண்டுவர அறிவிக்கை வெளியிட்டது.  இதன்படி பி எஸ் – IV ஆட்டோ எரிபொருள்கள் 01.04.2017 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது
  1. எத்தனால் கலந்த பெட்ரோல் (இ.பி.பி)  திட்டம்  

எத்தனால் விநியோக ஆண்டு 2018-19, எத்தனால் கொள்முதலுக்கு மூலப் பொருட்களைப் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்வதற்கான விவரங்கள் வருமாறு:

  1.  C - உயர் அழுத்த பாகுகள் ஒரு லிட்டர் விலை ரூ.43.46
  2.  B - உயர் அழுத்த பாகுகள் / ஒருபகுதி கரும்புச்சாறு  ஒரு லிட்டர் விலை     ரூ.52.43
  3. ஆலைகளுக்கான எத்தனால் விலை,  100 சதவீத கரும்புச் சாறை எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்துவோருக்கு ஒரு லிட்டர் விலை ரூ.59.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை சர்“க்கரை ஆலைகளுக்கு OMCக்கள் செலுத்திவிடும்.
  1. இயற்கை அல்லாத எத்தனாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்கும் திட்டம் இந்த அமைச்கத்தால், வருவாய்த்துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றின் துணையுடன் மேற்காள்ளப்பட்டது
  2. எத்தானல் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் உணவு மற்றும்பொது விநியாகத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு நிதி உதவி அளிக்கும் விரிவாக்கத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

 

  • III. உயிரி – டீசல் திட்ம்
  1. 8.14 கோடி லிட்டர் உயிரி டீசலை விநியோகம் செய்வதற்கான  கொள்முதல் உத்தரவுகளை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மே, அக்டோபர்  2018  காலக்கட்டங்களில் வழங்கியது. 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்க  வகை செய்யும் வகையில்இந்த உத்தரவுகள் இடப்பட்டன.

 

  • IV. இரண்டாம் தலைமுறை எத்தனால்
  1. எத்தனால் உற்பத்திக்கான மாற்றுவழி அதாவது இரண்டாவது  தலைமுறை 2-ஜி வழி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 12 2-ஜி உயிரி – சுத்திகரிப்பு நிலையங்களை ரூ.10,000 கோடி முதலீட்டில்அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
  2. சில 2-ஜி உயிரி எத்தனால் தொழில்கூடங்களுக்கான  விரிவான செயலாக்க அறிக்கை (டி.எஃப்.ஆர்) அறிக்கையை பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான நுமளிகார்  எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், பின்லாந்தைச் சேர்ந்த கெம்பாளிஸ் ஓ-வை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபோர்டம் 3 பி வி ஆகியவற்றுடன் இணைந்து அசாம் உயிரி எண்ணெய் சுத்திகரிப்பு பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை ஜூன் 2018 அன்று தொடங்கியது.

 

  1. உயிரி எரிபொருள்கள் குறித்த தேசியக் கொள்கை - 2018

a) உயிரி எரிபொருள்கள் 2018 குறித்த தேசியக் கொள்கயை அரசு 08.06.2018 அறிவிக்கையாக வெளியிட்டது. நாட்டின் உயிரி எரிபொருள் திட்டத்திற்கு இந்தக் கொள்கை உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்த கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு.

i)  உயிரி எரிபொருள்களை அடிப்படை உயிரி எரிபொருளாக வகைப்படுத்துதல் அதாவது முதலாவது தலைமுறை (1-ஜி) உயிரி எத்தனால் மற்றும் உயிரி டீசல் மற்றும் உயர்ரக உயிரி எரிபொருள்கள் – இரண்டாவது தலைமுறை (2ஜி) எத்தனால்.  உயிரி – சி.என்.ஜி முதலியவை, ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய வகையில் நிதி சலுகைகள் கிடைக்கும் வகையில் நீட்டிப்பு செய்வது.

iv) உயர் ரக உயிரி எரிபொருள்களின் உந்துதல் தொடர்பாக கொள்கை 2-ஜி எத்தனால் உயிரி சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ. 5000 கோடி ஆறு ஆண்டுகளில் மேலும் கூடுதல் வரிச் சலுகைகள் அதிக கொள்முதல் விலை 1-ஜி உயிரி எரிபொருள் ஒப்பிடுகையில்.

vi)  உயர் ரக மோட்டார் எரிபொருள் 

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம்  உயர் ரக  மோட்டார்  எரிபொருள்களுடன் இணைந்து ஒரு தொழில் நுட்ப கூட்டுத்திட்டத்தை சர்வதேச  எரிசக்தி முகமையின் கீழ் ஒரு உறுப்பினராக 09.02.2018-ல் இணைந்துள்ளது.

 

viii)  ‘சதாத்’ முயற்சி

  1. நிலையான மாற்று  போக்குவரத்து வசதிக்கான முயற்சி குறித்து பெரிய அளவில்  விளம்பரம் செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  புவனேஸ்வரம், சண்டிகார் மற்றும் லக்னோ ஆகிய நரகங்களில் உயர் அழுத்த உயிரி வாயு (சிபிஜி) உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சாலைகளில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
  2. இதன்படி முதல் சாலை அணிவகுப்பு சண்டிகரில் 17.11.2018-ல் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான ஐ ஓ சி எல் , வி பி சி எல். மற்றும் எஸ்.பி.சி.எல்  ஆகியவை நடத்தின.  இந்நிகழ்வில் தொழில் முனைவோர், தொழில்நுட்ப நிபுணர்கள். பஞ்சாப் எரிசக்தி மேம்பாட்டு முகமை. ஹரியானா, மாற்று எரிசக்தி  மேம்பாட்டு முகமை  ஆகியவற்றின் பிரதிநதிகளும் மற்றும் எஃப் ஐ சி சி ஐ, சி.ஐ.ஐ.,  ஏ.எஸ். எஸ்..ஓ..சி. எச்.ஓ.எம்

நிதி நிறுவனங்கள், விற்பனையாளர்கள் / விநியோகஸ்தர்கள் மற்றும் ஓ எம் சி அதிகாரிகள் பங்கேற்றனர்.   இந்தக் கண்காட்சியில். பங்குபெற்றோருக்கு சதாப் முயற்சிக் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. சிபிஜி ஆலைகளை அமைக்கவும். சிபிஜி-யை ஓ எம் சி –க்கு விநியோகிக்கவும் ஊக்குவிக்கப்பட்டது

 

6) சர்வதேச ஒத்துழைப்பு

  i) வெளிநாட்டு வளம்

  1. பிப்ரவரி 2018 இந்தியன் கன்சார்ட்டியம் ஓவியல். ஐ.ஓ.சி.எல். மற்றும் பி.பி ஆர்.ஐ ஆகியவை பத்து சதவீத வட்டியை அபுதாபியின் ஆழ்கடல் லோவர் ஸக்கும் எண்ணெய் தளம்
  2. முதலாவது நீண்ட தவனை எல்.என்.ஜி. சரக்கு அபுதாபியிலிருந்து தாபோலுக்கு மார்ச் 30, 2018 அன்று வந்து சேர்ந்த்து.
  3. ஏப்ரல் 2018 அன்று ஐ.ஓ.சி.எல். ஓமன் முக்கைஸினா எண்ணெய்க் கிணற்றிலிருந்து 17 சதவீதப் பங்கைப் பெற்றுக்கொண்டது.
  4. முதலாவது நீண்ட தவணை எல்.என்.ஜி. சரக்கு ரஷ்யாவிலிருந்து தாஹேஜ்-க்கு நான்காம் தேதி ஜூன் 18 அன்று வந்தது.

ii) முக்கிய உடன்பாடுகள்  /  ஒப்பந்தங்கள்

  1. சவ்வூதி ஆரம்கோ மற்றும் ஏ.டி.என்.ஓ.சி. கூட்டாக ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையை மேம்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2018அன்று கையெழுத்திட்டன.  மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (ஆர்.ஆர்.டி.சி.எல்) இந்த ஆலையை நிறுவியுள்ளது.
  2. இந்தியாவும் அமெரிக்காவும் அமைச்சக அளவிலான எரிசக்தி. பேச்சுவார்த்தை நடைமுறை தொடர்பாக ஏப்ரல் 17 2018 அன்று  தொடங்கியுள்ளது
  3. இந்தியா – நேபாள் பெட்ரோலியப் பொருள்களுக்கான  குழாய் பதிக்கும் பணி மோர்த்திஹரியிருந்து அம்லேகுஞ்ச் வரை புதுதில்லி வழியாக கொண்டு வருவதற்கான பூமி பூஜையை இந்தியா மற்றும் நேபாள பிரதமர்கள் நடத்தி வைத்தனர்.
  4. கொழும்புவில் எல்.என்.ஜி. முனையம்அமைப்பதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பெட்ரோநெட் எல்.என்.ஜி.இந்தியா , இலங்கை துறைமுக ஆணையம். மற்றும் ஜப்பான் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தானது
  5. எண்ணெய் சேமிப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான ஒப்பந்தம் ஐ.எஸ்.ஆர்.எல் மற்றும் ஏ.டி.என்.ஓ.சி (UAE)  ஆகியவற்றுக்கு இடையே பிப்ரவரி 10, 2018 அன்று கையெழுத்தானது. மங்களூரு எஸ்.பி.ஆரில் 5.86 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் நிரப்ப இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
  6. இந்தியா – வங்கதேசம் இடையே, நட்புறவு குழாய் பதிக்கும் பணியை செப்டம்பர் 18, 2018 அன்று இருநாடுகளின் பிரதமர்கள் தொடங்கி வைத்தனர்
  7. படுர் எஸ்.பி.ஆர்-ல் ஏ.டி.என்.ஓ.சி. பங்கேற்று ஆய்வு நடத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.எஸ்.பி ஆர். எல் மற்றும் ஏ.டி.என்.ஓ.சி. இடையே நவம்பர் 18, 2018 அன்று கையெழுத்தானது

 

 

iii) முக்கிய உடன்பாடுகள்  /  ஒப்பந்தங்கள்

   முக்கிய சர்வதேச மாநாடுகள் / கூட்டங்கள்

  1. 16ஆவது  அனைத்து உலக எரிசக்தி அமைப்பின், அமைச்சர் மட்டக் கருத்தரங்கு (ஐ இ எஃப்)  அமைச்சக கூட்டத்தை ஏப்ரல் 2018 பத்து முதல் 12-தேதி வரை புதுதில்லியில் இந்தியா நடத்தியது.
  2. 2-வது சர்வதேச ‘அறிவுப் பெருக்கு’ ‘think tank’ கூட்டம் அக்டோபர் 2018 அன்று நடைபெற்றது. இந்திய எண்ணெய் மற்றும் வாயுத்துறையில் எழும் சாவல்களை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காகஇந்தக் கூட்டம் நடைபெற்றது.
  3. 3-வது இந்தியா-ஒபெக் பேச்சுவார்த்தை 17 அக்டோபர் 2018 அன்றுநடைபெற்றது
  4. பி.என்.ஜி துறை அமைச்சர் இரண்டாவது வருடாந்திர இந்திய எரிசக்தி மாநாட்டை புதுதில்லியில் அக்டோபர் 14, 2018 அன்று தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டு செராவீக் சார்பில் இந்த மாநாடு அக்டோபர் 16 வரை நடைபெற்றது.
  5. அக்டோபர் 2018 அன்று புதுதில்லி, சிங்கப்பூர் மற்றும் லண்டன் நகரங்களில்  ஐ.எஸ்.பி.ஆர்.எல். சார்பில் கண்காட்சி நடைபெற்றது.  இரண்டாவது கட்ட  பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் வசதிக்கான பி.பி.பி. மாதிரி கட்டுமானப் பணியை இறுதி செய்வதற்காக இக்கண்காட்சி நடைபெற்றது.

------------


(Release ID: 1556599) Visitor Counter : 816


Read this release in: English , Hindi , Bengali