விண்வெளித்துறை

இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-11 பிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

प्रविष्टि तिथि: 05 DEC 2018 10:14AM by PIB Chennai

இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்டதும் மிக நவீனமானதுமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-11 பிரெஞ்ச் கயானாவில் உள்ள விண்வெளித் தளத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

 

 

பிரெஞ்ச் கயானவில் உள்ள கூறு (Kourou) ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 விஏ – 246 செலுத்துவாகனத்தின் மூலம் இந்தியாவின் ஜி சாட்-11,   தென்கொரியாவின் ஜியோ-கோம்ப்சாட் – 2 ஏ (GEO-KOMPSAT-2A) ஆகிய செயற்கைக் கோள்கள் திட்டமிட்டபடி இந்திய நேரப்படி அதிகாலை மணி 2:07-க்கு  செலுத்தப்பட்டது. ஏரியன் விண்தனத்தில் உள்ள சோயூஸ், வேகா ஆகியவற்றுடன் செயல்படுகின்ற மூன்றில் ஒரு செலுத்துவாகனமாக ஏரியன்-5 உள்ளது.

 

30 நிமிட பயணத்திற்குப்பின் ஜிசாட்-11 ஏரியன்-5 செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்து புவியின் நீள்வட்டப்பாதையில் நுழைந்தது. விருப்பப்பட்டதற்கு மிக நெருக்கமான சுற்றுவட்டப்பாதையை அது அடைந்தது.

 

5,854 கிலோ கிராம் எடையுள்ள ஜிசாட்-11, 32 பயன்பாட்டு ஒளிக்கற்றைகளைக் கொண்ட கூ(KU) அலைவரிசை மற்றும் 8 குவி மைய ஒளிக்கற்றைகளைக் கொண்ட கா(KA) அலைவரிசை ஆகியவற்றின் மூலம் இந்தியப் பெருநிலப்பரப்பிலும், தீவுகளிலும் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவோருக்கு அதிக அளவு தகவல்களை வழங்கும்.

 

“டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பகுதியாக உள்ள இந்தியத் தகவல் இணைப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஊரக மற்றும் எளிதில் தொடர்பு கிடைக்காத கிராம ஊராட்சிகளுக்கான அகண்ட அலைவரிசை தொடர்புகளுக்கு ஜி சாட்-11 கூடுதல் உத்வேகம் அளிக்கும்” என்று இஸ்ரோ தலைவர் டாக்டர்.கே.சிவன் தெரிவித்தார்.

 

-பாங்கிங், இ-சுகாதாரம், இ-நிர்வாகம் போன்ற மக்களுக்கான நலத்திட்டங்களை விரிவாக்கம் செய்வதை இந்தியத் தகவல் இணைப்புத் திட்டம் நோக்கமாகக் கொண்டது.

 

எதிர்காலத்தில் செலுத்தப்படும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கு முன்னோடியாக ஜி சாட் – 11 செயல்படும் என்றும் அவர் கூறினார். “இன்றைய வெற்றிகரமான பயணம் ஒட்டுமொத்தக் குழுவின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது” என்று டாக்டர்.சிவன் மேலும் தெரிவித்தார்.

 

செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்தபின் கர்நாடகாவின் ஹசனில் உள்ள இஸ்ரோவின் மையக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜி சாட் – 11-ன் இயக்கக் கட்டுப்பாட்டையும், உத்தரவுகள் பிறப்பிப்பதையும் எடுத்துக் கொண்டது. ஜிசாட்–11-ன் இயங்கு நிலை இயல்பாக உள்ளதா என்பதையும் அது கண்டறியும்.

 

செயற்கைக்கோளில் உள்ள உந்துவிசை முறைகளைப் பயன்படுத்தி, அதனை, வரும் நாட்களில் படிப்படியாக பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிலோ மீட்டர் புவிவட்டப்பாதையில் செலுத்தும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள். புவிவட்டப் பாதையில் தீர்க்க ரேகைக்குக் கிழக்கே 74 டிகிரியில் ஜிசாட்-11 நிலைநிறுத்தப்படும். இதைத் தொடர்ந்து 2 சூரிய சக்தி வட்டுக்களையும் 4 ஆன்டனா பிரதிபலிப்பான்களையும் சுற்றுவட்டப்பாதையில் ஜிசாட்-11 பணியில் ஈடுபடுத்தும். சுற்றுவட்டப்பாதை சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்தபின் அது செயல்படத் தொடங்கும்.

 

கடந்த 21 நாட்களில் இஸ்ரோ 3 செயற்கைக்கோள்கள், 2 செலுத்துவாகனங்களின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

                               

                                                                                                                    ******

அரவி/எஸ்எம்பி/கோ


(रिलीज़ आईडी: 1554723) आगंतुक पटल : 406
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Malayalam