பிரதமர் அலுவலகம்
ரஷ்யா - இந்தியா – சீனா முத்தரப்பு சந்திப்பு
Posted On:
30 NOV 2018 11:50PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்க் ஆகியோருடன் பியூனஸ் அயர்ஸ் நகரில் இன்று (30.11.2018) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மூன்று தலைவர்களும், சர்வதேச அமைப்புகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், மூன்று நாடுகளிடையே மேலும் அதிக அளவிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது குறித்தும் விவாதித்தனர். ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு மற்றும் பழைய மற்றும் புதிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் போன்ற உலகிற்கு பலனளிக்கக் கூடிய அமைப்புகளில், சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், இவர்கள் ஒப்புக்கொண்டனர். பன்னாட்டு வர்த்தக நடைமுறைகளால் கிடைக்கும் பலன்கள் பற்றியும், சர்வதேச வளர்ச்சி மற்றும் வளத்திற்கான வெளிப்படையான உலகப் பொருளாதார சூழல் குறித்தும், மூன்று தலைவர்களும் விவாதித்தனர்.
பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் இ.ஏ.எஸ். நடைமுறைகள் மூலம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு, அனைத்துவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதை ஊக்குவித்து, சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைப்பாட்டை மேம்படுத்த, மூன்று நாடுகளிடையே அனைத்து மட்ட் ங்களிலும் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்வது எனவும் மூன்று தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஆர்.ஐ.சி. முறையில் ஒத்துழைப்பதன் அவசியத்தை ஒப்புக்கொண்ட தலைவர்கள், இது போன்ற முத்தரப்பு சந்திப்புகளை பல்வேறு சர்வதேச மாநாடுகளை ஒட்டி, மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
-----------
எம் எம் / கீதா
(Release ID: 1554477)
Visitor Counter : 223