வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

40 ஆவது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 2,05,442 வீடுகள் கட்ட அனுமதி தமிழ்நாட்டில் 15,529 வீடுகள் கட்ட ஒப்புதல்

Posted On: 28 NOV 2018 3:47PM by PIB Chennai

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை தற்போது 65,04,037 ஆகும்.  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளின் பயன்பாட்டுக்கு மேலும் 2,05,442 மலிவு விலையிலான வீடுகளைக் கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது.  புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் 40 ஆவது கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

 

மகாராஷ்டிராவில் 1,16,042 வீடுகளும், கர்நாடகாவில் 31,657 வீடுகளும் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பீஹார் மாநிலத்தில் 26,880 வீடுகளும், தமிழ்நாட்டில் 15,529 வீடுகளும் மற்றும் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் 15,334 வீடுகளும் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ. 7,391 கோடி திட்டச் செலவில் மொத்தம் 392 திட்டங்களுக்கு ரூ. 3,082 கோடி மத்திய அரசின் நிதியுதவியுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

************



(Release ID: 1554125) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Malayalam