நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மொரிஷியஸ் உடன் நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2018 1:33PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

பலன்கள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும். நுகர்வோர் நலன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரித்து, இரு நாடுகளிலும் ஏற்பட்டு வரும் வளர்ச்சி தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு பலன்களை பெறுவதற்கான நிறுவன வரைமுறைக்கு  உதவும். மேலும், தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள், தொலைதொடர்பு சார்ந்த சந்தைபடுத்துதல், பன்அளவு சந்தைபடுத்துதல், இணைய வழி வர்த்தகம் போன்ற சவால்களை சந்திக்கவும் நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான உள்ளடக்கிய திடமான மற்றும் தொடர்சியான வளர்ச்சிக்கும் உதவும்.  

 

தேசிய மற்றும் சர்வதேச தரங்களை கண்காணிப்பதை உறுதி செய்வதை உறுதி செய்வதின் மூலம் புதிய சவால்களை கையாளும் வகையில் புதிய துறைகளில் நிபுணத்துவம் வளரும்.  தகவல் மற்றும் பயிற்சி தொடர்பான பரிமாற்றங்கள், சிறந்த ஆட்சிக்கான நிபுணத்துவம் மற்றும் நுகர்வோர் ஏமாறாமல் தடுப்பதையும் இது உறுதி செய்யும்.  

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1553513) வருகையாளர் எண்ணிக்கை : 159
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Telugu , Kannada