உள்துறை அமைச்சகம்

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2018 1:30PM by PIB Chennai

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  1. இந்த மருத்துவக் கல்லூரி 189 கோடி ரூபாய் செலவில் சில்வாசாவில் அமைக்கப்படும். நடப்பு நிதியாண்டில் 114 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 74 கோடி ரூபாயும் மருத்துவக் கல்லூரி அமைக்க செலவிடப்படும். ஆண்டுக்கு 150 மாணவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
  2. இந்தத் திட்டம் அடுத்த நிதியாண்டில் முடிக்கப்படும். மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சகத்தின் வழிமுறைகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி அமைக்கப்படும்.
  • iii. மருத்துவக் கல்லூரியைப் பராமரிக்க, ஆண்டுக்குத் தேவைப்படும் பணம் யூனியன் பிரதேசத்தின் நிதிநிலை அறிக்கையிலிருந்து அளிக்கப்படும்.
  • iv. நிர்வாக செலவீனக் குழு பரிந்துரைப்படி, இந்த மருத்துவக் கல்லூரிக்கு 357 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்களுக்கு, மத்திய அரசு இணைச் செயலர் மற்றும் அதற்குமேல் நிலையிலான 21 நிரந்தர பணியிடங்களும் அடங்கும்.

பயன்கள்

     சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைப்பது, இந்த யூனியன் பிரதேசத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதோடு, மருத்துவர் பற்றாக்குறைக்கும் தீர்வாக அமையும். யூனியன் பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்புகள் கூடுதலாக கிடைக்கும். இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த மருத்துவக் கல்லூரி பயனளிக்கும். மருத்துவர்களின் எண்ணிக்கை யூனியன் பிரதேசத்தில் அதிகரிப்பது, சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். 

 

*****

 

ஈ.எம்/க. 


(Release ID: 1553459) Visitor Counter : 137


Read this release in: English , Telugu , Kannada