நிதி அமைச்சகம்
2018 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது
प्रविष्टि तिथि:
01 NOV 2018 1:08PM by PIB Chennai
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.100,710 கோடியாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.16,464 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.22,826 கோடி, இறக்குமதி சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.53,419 கோடி (இறக்குமதி மூலம் வசூலானது ரூ. 26,908 கோடி உட்பட) மற்றும் செஸ் வரி மூலம் வசூலானது ரூ.8,000 கோடி ( இறக்குமதி மூலம் வசூலானது ரூ.955 கோடி உட்பட).
31.10.2018 வரை, செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மொத்த எண் 3பி, ரிட்டன்ஸ் எண்ணிக்கை 67.45 லட்சம்.
அக்டோபர் 2018 வசூலான வருவாய் ரூ.100,710 கோடியாகும். இந்த தொகை செப்டம்பர் 2018-ல் வசூலான ரூ.94,442 கோடியைக் காட்டிலும், 6.64 சதவீதம் அதிகமாகும்.
**************
கீதா/நைனா/உஷா
(रिलीज़ आईडी: 1551612)
आगंतुक पटल : 206