ரெயில்வே அமைச்சகம்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அர்த்தமுள்ள மாற்றங்கள் கொண்டுவர 13.27 லட்சம் மரக்கன்று நடுதல், 1800 புதிய/மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள் அமைத்தல் போன்ற உறுதியான திட்டங்களை ரயில்வேத் துறை தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
05 OCT 2018 11:58AM by PIB Chennai
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு முன்னுரை அளித்து, ரயில்வே நிலையங்கள், ரயில்வே காலனி போன்ற பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்களில் பசுமையை அதிகரிக்க இந்திய ரயில்வேத் துறை பல உறுதியான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் 15 நாட்களில் 1300 கி.மீ. ரயில் பாதைகள் , ரயில் நிலையங்கள், காலி மனைகளில் சுமார் 13.27 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். பசுமையான பொது இடங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேத் துறை தனது இடங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை மேம்படுத்தவும், புதிய கழிப்பறைகளைக் கட்டவும் ரூ. 300 கோடி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, 1400 ரயில் நிலையங்களில் 1800 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன / மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 200 கழிப்பறைகளும் அடங்கும்.


(रिलीज़ आईडी: 1548702)
आगंतुक पटल : 204