நிதி அமைச்சகம்
செப்டம்பர் மாதம், ஜி.எஸ்.டி வருமானம் ரூ. 94,000 கோடியை தாண்டியது ; ஆகஸ்ட் மாதத்தை விட வருவாய் அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
01 OCT 2018 12:54PM by PIB Chennai
செப்டம்பர், 2018 – ல் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ. 94,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ. 15,318 கோடி சி.ஜி.எஸ்.டி, ரூ. 21,061 கோடி எஸ்.ஜி.எஸ்.டி, ரூ. 50,070 கோடி ஐ.ஜி.எஸ்.டி ஆகவும் (இதில் ரூ. 25,308 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்) மற்றும் ரூ. 7,993 கோடி வரி தீர்வையாகும் (இதில் ரூ. 769 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்). மொத்தமாக ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் 30, 2018 வரை 67 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர் 3பி-க்கு வரி கணக்கு தாக்கல் செய்யபடுள்ளது.
செப்டம்பர் 2018-ல் கணக்குமுடித்தப் பின், மத்திய மற்றும் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ. 30,574 கோடி சி. ஜி.எஸ்.டி மற்றும் ரூ. 35,015 கோடி எஸ்.ஜி.எஸ்.டி ஆகும்.
ஆகஸ்ட் மாதம் ரூ. 93,690 வருவாய் வசூலிக்கப்பட்டது. இதை ஒப்பிடுகையில், செப்டம்பர், 2018 – ல் வருவாய் அதிகரித்து , ரூ. 94, 442 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கீழ் உள்ள வரைபடம் இந்த ஆண்டின் வருவாய் குறித்து தெரிவிக்கிறது.

***
(रिलीज़ आईडी: 1548080)
आगंतुक पटल : 234