மத்திய அமைச்சரவை

வேளாண் மற்றும் அதைச் சார்ந்த தொழில்துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 SEP 2018 4:12PM by PIB Chennai

  பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளித்தது.

    இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

i. சட்டங்கள், தரநிர்ணயம், உற்பத்தி மாதிரிகள், பரஸ்பர விருப்பங்கள்.

ii. உஸ்பெகிஸ்தானில் இருநாடுகள் கூட்டாக வேளாண் முனையங்களை ஏற்படுத்துவது.

iii. பயிர் உற்பத்தி மற்றும் பன்முகத்தன்மை குறித்த அனுபவங்களை பரிமாறிக் கொள்வது.

iv. நவீன தொழில்நுட்ப ரீதியிலான விதை உற்பத்தி தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது;

v. வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் நீர்ப்பாசனத்திலும் தண்ணீரின் ஆற்றலை  தொழில்நுட்பத்தின் மூலம் உயர்த்தி பயன்படுத்துவது

vi. மரபு, உயிரி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு, மண்வளம் சேமிப்பு, எந்திரமயம், நீர்வளம் உள்ளிட்டவற்றில் கூட்டாக அறிவியல் ஆய்வை மேற்கொள்வது.

vii. தனிமைப்படுத்தப்பட்ட செடிகள் பற்றிய துறையில், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான ஒத்துழைப்பு.

 viii. கால்நடைப் பாதுகாப்பு, கால்நடைக்கான சுகாதார வசதி, கோழிப்பண்ணை உள்ளிட்ட துறைகளில் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது.

ix. விவசாயம் மற்றும் உணவுத் தொழில் ஆகியவற்றுக்கான  ஆராய்ச்சி நிலையங்களுக்கு இடையே அறிவியல் மற்றும் நடைமுறைக்கான செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது (கண்காட்சி மாநாடு, கருத்தரங்கு).

x. விவசாயம் மற்றும் உணவு வர்த்தகத்தில் ஒத்துழைப்பு.

xi. உணவுப்பதப்படுத்தும் தொழில்களை  கூட்டாக தொடங்குவது பற்றி ஆய்வு.

xii. இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ள துறைகள் குறித்து ஒத்துழைப்பு.

      இருநாடுகளின் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் கூட்டுப்பணிக்குழு ஒன்றை அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, நிறைவேற்றப்பட்ட பணிகளை கண்காணிப்பது, ஆகியவற்றை கூட்டுப்பணிக்குழு மேற்கொள்ளும். கூட்டுப்பணிக்குழுவின் கூட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடைபெறும். ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். அதன் பிறகு தானகவே மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.  இந்தியா அல்லது உஸ்பெகிஸ்தானிடமிருந்து அறிவிப்பு வந்த நாளிலிருந்து ஆறு  மாதத்திற்கு பிறகு இந்த ஒப்பந்தம் காலவதியாகிவிடும்.

******



(Release ID: 1547391) Visitor Counter : 116