மத்திய அமைச்சரவை

சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது

Posted On: 26 SEP 2018 4:03PM by PIB Chennai

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று கூடியது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது.   இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

  • அரசு சாராத நிறுவனங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசும், மாநில அரசுகளும் 51 சதவீத சமபங்கை கையகப்படுத்துவது என்றும் தனியார் நிறுவனங்கள் வைத்திருந்த சமபங்கை கையகப்படுத்த சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னல் வாரியம் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிப்பது.
  • சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலை 100 சதவீத அரசு உரிமையுடன், மத்திய அரசுக்கும் (50 சதவீதம்) மாநில அரசுகளுக்கும் (50 சதவீதம்) இடையே சமபங்கு உரிமையை பெறும் வகையில் மாற்றியமைப்பது.
  • தற்போது இயங்கிவரும் சரக்கு மற்றும் சேவை வரி (GSTN) வலைப்பின்னல் வாரியத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பாக 3 இயக்குநர்களை நியமிப்பது என்றும் மற்றும் 3 இதர இயக்குநர்களை, இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்வது என்றும் மற்றும் ஒரு தலைவர், தலைமை செயல் அதிகாரி ஆகியோரை நியமிப்பது. எனவே இதில் இடம் பெற்றுள்ள மொத்த இயக்குநர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

******



(Release ID: 1547380) Visitor Counter : 124