பாதுகாப்பு அமைச்சகம்

ரூ. 9,100 கோடி மதிப்புள்ள கருவிகள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல்

Posted On: 18 SEP 2018 1:34PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு இன்று கூடி, ரூ.9,100 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள  கருவிகளை பாதுகாப்புப் படைகளுக்கு என கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கியது.

      உள்நாட்டு மயமாக்கல் மற்றும் சுயசார்பு இலக்குகளை அடைவதற்கென இந்தியர்களிடமிருந்து வாங்குதல் பிரிவின் கீழ் பி.டி.எல் நிறுவனத்திடமிருந்து இரண்டு பிரிவு ஆகாஷ் ஏவுகணை  அமைப்புகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்தது.  இந்த ஏவுகனைகள் முன்னதாக பாதுகாப்புப் படைகளில் சேர்க்கப்பட்டுள்ள ஆகாஷ் ஏவுகனைகளில் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் ஆகும். இந்த புதிய ஏவுகனை  அமைப்பில் தேடும் தொழில்நுட்பம்,  360 டிகிரி சுழன்று தாக்கும் திறன், குறைந்த அளவு வடிவம், போன்ற பண்புகளைக் கொண்டதாகும். இந்த மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகனை ஆயுத அமைப்பு, பாதுகாப்புப் படைகளின் முக்கிய சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படும் முக்கியமான கருவியாக இருக்கும்.

   டி-90 ரக கவச வாகனங்களுக்கான தனிநபர் நீரடி சுவாச கருவிகள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டம், இதே கவச வாகன அமைப்புகளுக்கான வழிநடத்தக் கூடிய ஆயுத அமைப்பின் வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்தது.
 

------


(Release ID: 1546507) Visitor Counter : 214