மத்திய அமைச்சரவை

விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:33PM by PIB Chennai

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கும் புருனே நாட்டுக்கும் இடையில் விண்வெளி ஆய்வு, அறிவியல், செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், தகவல் பெறுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2018, ஜூலை 19ம் தேதி கையெழுத்தானது.

பலன்கள்:

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை இயக்குவது, பராமரிப்பது, தரைதளத்தின் நிலையத்துடனான இணைப்பை விரிவுபடுத்துதல் வழிசெய்யும். புருனே நாட்டின் அதிகாரிகள், மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் விண்வெளி தொழில்நுட்ப நடவடிக்கைகளில் இந்தியா தனது நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் துணை புரியும்.

 

இந்த உடன்பாட்டின் மூலம் புருனே நாட்டுடனான ஒத்துழைப்பு இந்தியாவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இயக்கி, பராமரித்து விரிவுபடுத்துவதற்கும்  உதவும். இதன் மூலம் அனைத்துப் பகுதிகளும் பிரிவுகளும் பலன்பெறும்.

 

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் புதிய ஆய்வு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் கிடைக்கவும், விண்வெளித் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் உரிய பயிற்சிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியமைக்கும்.

****



(Release ID: 1545901) Visitor Counter : 100