குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அமெரிக்காவில் இரண்டாவது உலக ஹிந்து மாநாடு – குடியரசு துணை தலைவர் பங்கேற்க உள்ளார்

Posted On: 06 SEP 2018 12:53PM by PIB Chennai

குடியரசு துணை தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு செப்டம்பர் 8-9, 2018 தேதிகளில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உலக மதங்கள் மாநாட்டில் சுவாமி விவேக்கானந்தர் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 125வது ஆண்டை முன்னிட்டு சிக்காகோவில் செப்டம்பர் 8-9, 2018 இரண்டாவது உலக ஹிந்து மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடியரசு துணை தலைவர் பங்கேற்க உள்ளார்.

அமெரிக்காவின் 14 தெலுங்கு அமைப்புகள் சேர்ந்து கிரேட்டர் சிக்காகோவில் உள்ள இந்து கோவிலில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் குடியரசு துணை தலைவர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கவரும் பல்வேறு உலக தலைவர்களுடன் இருநாட்டு உறவுகள் குறித்தும் குடியரசு துணைத் தலைவர் கலந்துரையாட உள்ளார்,


(Release ID: 1545237) Visitor Counter : 161
Read this release in: English , Urdu , Marathi , Gujarati