பிரதமர் அலுவலகம்

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணியினரை பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 02 SEP 2018 8:50PM by PIB Chennai

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

                        “2018-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய அணியினரை அவர்களின் மிகச்சிறந்த செயல்பாட்டுக்காக நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் 2018-ஆம் ஆண்டின் விளையாட்டுகள் இந்தியாவிற்கு மிகச்சிறந்ததாக அமைந்துள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் வீராங்கனைகளும் இந்தியாவின் பெருமிதமாக விளங்குகின்றனர்.

                        2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது இடத்தை நாம் நிலைநிறுத்தியிருக்கிறோம். வரலாற்று ரீதியாக நாம் வலுப்பெற்றிருக்கிறோம்.  இந்த விளையாட்டுக்களில் நாம் பல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். இவ்வளவு வெற்றிகள் முன்பு நமக்குக் கிடைத்ததில்லைஇது அதிகபட்ச ஆக்கப்பூர்வமான அறிகுறியாகும்இந்தியர்களின் விளையாட்டுத் திறனுக்கு இது நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.

                        விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் பயிற்சியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்நமது சாம்பியன்களுக்கு தொடர்ச்சியான ஆதரவைத்தந்த உங்களுக்கு நன்றி. நமது விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அனைவரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்

                          எப்போதும் நினைவுகூரத்தக்க 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பாராட்டுகள். விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும்  மகத்தான செயல்பாடுகளையும், விளையாட்டு உணர்வையும் இந்த விளையாட்டு போட்டிகளில் வெளிப்படுத்தினர்” என்று பிரதமர் தொடர்ச்சியான டுவிட்டர் செய்திகளில் தெரிவித்தார்.                                                                             

 

*****   



(Release ID: 1544808) Visitor Counter : 129