கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகம் மற்றும் சரக்குகள் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 30 AUG 2018 4:37PM by PIB Chennai

துறைமுகம் மற்றும் சரக்குகள் ஏற்றி இறக்கும் சி’ மற்றும் ‘டி’  வகை தொழிலாளர்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி முன்னிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்தானது.

 இந்த ஒப்பந்தத்தின் மூலம்  நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் துறைமுகம் மற்றும் சரக்குகள் ஏற்றி இறக்கும்  32,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் 1,05,000 சி’ மற்றும் ‘டி’ வகை   ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.  அனைத்து  பெரிய துறைமுகங்களிலும்  பணியாற்றுகின்ற  மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு  சுமார் 560 கோடி ரூபாய்  செலவாகும்.

  1947-ன் தொழில்துறை தாவாக்கள் சட்டம் பிரிவு 12(3) கீழ் துறைமுக நிர்வாகத்திற்கும் ஆறு  பெரிய  துறைமுக மற்றும் சரக்குகள் ஏற்றி இறக்கும் தொழிலாளர்  சம்மேளனங்களுக்கும் இடையே தொழிலாளர் நல தலைமை ஆணையரை பிரதிநிதித்துவப்படுத்தும்  மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது 2017 ஜனவரி 1-லிருந்து பின் தேதியிட்டு  அமல்படுத்தப்படும். பல பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பத்தாண்டுக் கால உடன்பாடு என்பதற்கு மாறாக துறைமுகப் பிரிவில் ஐந்தாண்டுக்கால ஒப்பந்தமாக இது கையெழுத்தாகியுள்ளது.

-----



(Release ID: 1544541) Visitor Counter : 166