பிரதமர் அலுவலகம்
ஜுனாகத் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர்
प्रविष्टि तिथि:
23 AUG 2018 4:46PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜுனாகத் மாவட்டத்தில் இன்று பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை, பால் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் ஜுனாகத் வேளாண் பல்க்லைக்கழகத்தின் சில கட்டிடங்கள் இதில் அடங்கும்.
இதையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ரூ. 500 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்கள் இன்று அர்ப்பணிக்கப்படுகிறது அல்லது அவற்றின் அடிக்கல் நாட்டப்படுகிறது என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய சக்தி மற்றும் துடிப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் போதுமான நீர் சென்றடைவதை உறுதி செய்யும் தொடர் முயற்சி குஜராத்தில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். நீர் சேமிப்பை நோக்கி நாம் செயல்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குஜராத் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். இவை நோயாளிகளுக்கு மட்டும் உதவாமல் மருத்துவம் பயில விரும்புவோருக்கும் உதவுவதாக அவர் கூறினார். ஜன் ஔஷதி திட்டத்தின் கீழ் மக்கள் மருந்து விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, அவை மருந்துகளின் விலைகளை குறைத்திருப்பதாக அவர் கூறினார். கட்டுபடியாகக்கூடிய விலையிலான மருந்துகளை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அணுகுவது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
தூய்மைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் உலகந்தழுவிய பாராட்டைப் பெறுவதாக பிரதமர் கூறினார். தூய்மையான இந்தியா மக்கள் நோய்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறூதி செய்வதால் தூய்மைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் முக்கியம் என அவர் மேலும் கூறினார்.
சுகாதாரத் துறைக்கு நல்ல மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுவதாக பிரதமர் கூறினார். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் கூறிய அவர், உலகளாவிய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப இந்த துறையின் வேகம் இருக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மக்கள் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்டுபடியாகக்கூடிய கட்டணத்தில் ஏழைகளுக்கும் உயர் தரத்திலான சுகாதார சேவை கிடைப்பது உறுதி செய்யப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
****
(रिलीज़ आईडी: 1543743)
आगंतुक पटल : 185