பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஆகஸ்ட் 10 உலக உயிரி எரிபொருள் தினம்
Posted On:
09 AUG 2018 9:36AM by PIB Chennai
உலக உயிரி எரிபொருள் தினம் புது தில்லி விஞ்ஞான் பவனில் ஆகஸ்ட் 10ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நிகழ்ச்சியைப் பிரதமர் தொடங்கிவைத்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
விவசாயிகள், விஞ்ஞானிகள், உயிரி எரிபொருள் துறை சார்ந்த தொழில்முனைவோர், வேளாண்மையியல், பொறியியல் துறை மாணவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், உயிரி எரிபொருள் துறையில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள், ஊடகத்தினர் ஆகியோர் பங்கேற்பர்.
உயிரி எரிபொருள் உற்பத்தி மூலம் கச்சா எண்ணெயையே சார்ந்திருப்பதைக் குறைக்கும். சுற்றுச்சூழல் தூய்மை காக்கப்படும். விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழியமைக்கும்.
உயிரி எரிபொருள் திட்டம் இந்திய அரசின் முன்முயற்சிகளான இந்தியாவில் உற்பத்தி செய், தூய்மை இந்தியா ஆகியவற்றுக்கு உறுதுணையாக அமையும். 2018ம் ஆண்டுக்கான உயிரி எரிபொருள் தேசியக் கொள்கைக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
*************
(Release ID: 1542227)
Visitor Counter : 195