சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீண்டகால கடன் பெற பாரத ஸ்டேட் வங்கியுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 02 AUG 2018 1:35PM by PIB Chennai

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.25,000 கோடிக்கு பிணையம் இல்லாத கடன் பெற உள்ளது.  மூன்றாண்டு காலத்திற்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லாமல் 10 ஆண்டுகாலத்திற்கான கடனாகும் இது.  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு எந்தவொரு நிறுவனமும் ஒரே தவணையில் அளிக்காத மிகப்பெரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் இவ்வளவு பெரிய தொகையை பிணையம் இல்லாமல் நீண்டகால கடனாக ஒரேநேரத்தில் வேறு எந்த நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கியதில்லை.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி முன்னிலையில் நாளை (03.08.2018) புதுதில்லியில் கையெழுத்தாகிறது. 

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி 2019 மார்ச் 31-க்குள் வழங்கப்படும்.  இதற்கான வட்டி வீதம் ஒருமாத எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் இருக்கும்.  இந்த தொகைக்கு நிலுவையாக சேரும் வட்டி மாத அடிப்படையில் வழங்கப்படும்.  இந்த தொகையை 2019 மார்ச் 31-க்குள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  எத்தனை தவணைகளாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

*******


(रिलीज़ आईडी: 1541403) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Malayalam