மத்திய அமைச்சரவை
ஐ.டி.பி.ஐ. வங்கியில் கட்டுப்படுத்தும் பங்குரிமையை ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெறவிருக்கிறது
இவ்வங்கியில் அரசின் பங்குகளை 50%க்கும் கீழாக குறைத்திட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
Posted On:
01 AUG 2018 6:09PM by PIB Chennai
ஐடிபிஐ வங்கியில் இந்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியின் கட்டுப்படுத்தும் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒதுக்கீட்டின் மூலமாக வங்கியை வளர்ப்பவராகவும், சொத்தின் சம பங்குகள், வங்கி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தாக்கம்
- இந்த கையகப்படுத்தலின் காரணமாக வாடிக்கையாளர்கள், ஆயுள் காப்பீட்டுக்கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி ஒட்டுமொத்த விரிவான பலன்கள் பெற வாய்ப்புள்ளது.
- பொருளாதாரத்தின் அளவீடு, பங்கீடு மற்றும் வாடிக்கையாளர்களை பெறுவதற்கான செலவினம் குறைவது, அதிகப்படியான திறன், செயல்பாட்டில் வளையக்கூடிய தன்மை மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான அதிக வாய்ப்பு ஆகியவவையே இரண்டு அமைப்புக்களும் பெறும் பலன்களாகும்.
- ஆயுள் காப்பீட்டுக் கழகமும் வங்கியும், நிதி அளவில் வலுப்பெற உதவுவதோடு, வீட்டுக்கடன் மற்றும் பரஸ்பர நிதி போன்ற நிதி சேவைகளை வழங்கும் இவற்றின் இதர அமைப்புக்களும் வலுவடைய உதவும்.
- மேலும், வீட்டு வாசலில் வங்கி சேவைகளைப் பெறவும், வாடிக்கையாளர்களுக்கான சேவை அபிவிருத்தி அடையவும், நிதி ஆதாரத்திற்கான வாய்ப்புகளைப் பெருக்கவும், 11 லட்சம் ஆயுள் காப்பீட்டு கழக முகவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
- குறைந்த செலவிலான வங்கிக் கணக்குகள் மற்றும் பணம் செலுத்தும் சேவைகளில் இருந்து வரும் வருமானத்தை அதிகரிக்கவும் நிதி ஆதாரத்தை குறைந்த செலவில் பெறவும் இது வங்கிக்கு ஏதுவாக இருக்கும்.
- வங்கியின் 1916 கிளைகளின் மூலமாக ஆயுள் காப்பீட்டுக் கழகம் வங்கியின் நம்பிக்கையையும் பெறும். அதுமட்டுமல்லாது, வங்கியின் நிதி நிர்வாக சேவைகளை ஆயுள் காப்பீட்டு கழகத்தால் அணுக முடியும்.
- மேலும், இதனால் நிதி சார்ந்த ஒருங்கிணைந்த நிறுவனம் ஆக வேண்டும் என்ற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தொலைநோக்கு பார்வையும் நிறைவேறும்.
- வாடிக்கையாளர்களும் ஒரு கூரையின் கீழ் அனைத்து நிதி சேவைகளின் பலனை பெறுவர் என்பதோடு, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை விரிவடையச் செய்வதற்கான வசதியையும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெற்றுவிடும்.
பின்னணி:
2016ஆம் ஆண்டு தமது பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மடைமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் தொடங்கி விட்டது என்று அறிவித்ததோடு, அவ்வங்கியின் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கு கீழாக குறைப்பதற்கான வாய்ப்பை அரசு பரிசீலிக்கும் என்றார். இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, நிர்வாகத்தின் ஒப்புதலோடு ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐடிபிஐ வங்கியின் கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்த இந்திய காப்பீடு முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அனுமதியை நாடியது. இந்த ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு ஐடிபிஐ வங்கியின் 31 சதவீத கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்தும் தனது திட்டத்தை ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெளியிட்டதுஃ நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பிறகு ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கு 51 சதவீதத்திற்குக் கீழாக குறைப்பதற்கான அரசின் முடிவு பற்றி கேட்டறிந்தது.
*********
(Release ID: 1541130)
Visitor Counter : 221