சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
31 JUL 2018 1:10PM by PIB Chennai
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் பிரதிநிதித்துவம் அளித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களின் கீழ் அளிக்கும் சேவைகள் தவிர ஆதிதிராவிடர்களுக்கு அரசியல் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களிலும் மாநிலங்களின் கீழ் சேவைகளிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு சாதாரணமாக 50 சதவீதத்தை விட அதிகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. விஜய் சாம்பிளா இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1540848)
आगंतुक पटल : 225