வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

550-க்கும் அதிகமான புதுமைத் தொழில் நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் நிதியுதவிக்கு தகுதியாக உள்ளன

प्रविष्टि तिथि: 23 JUL 2018 12:43PM by PIB Chennai

2018 ஜூன் நிலவரப்படி தொடங்கிடு இந்தியா தொகுப்பில் 550-க்கும் அதிகமான புதுமைத் தொழில் நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் நிதியுதவிக்கு தகுதியாக உள்ளன. 2,20,000 பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாரிப்புகள் கையாளப்பட்டு வருகின்றன.

     2018-மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட தொடங்கிடு இந்தியா திட்டத்தின் 2-வது கட்டத்தில் அடல் மேம்பாட்டு மையங்கள், செயல்பாட்டில் உள்ள மேம்பாட்டு மையங்கள் உட்பட 80 மேம்பாட்டு மையங்கள், நிதி ஆயோக்கின் நிதியுதவி பெற தெரிவு செய்யப்பட்டுள்ளன.  2017-18ஆம் ஆண்டின், முதல்கட்டத்தின்போது 19 மேம்பாட்டு மையங்கள் தெரிவு செய்யப்பட்டன.

     தொடங்கிடு இந்தியா முன்முயற்சி தொடர்பான அனைத்து தகவல்களுக்கும், ஒரே இடத்தில் பதில் கிடைக்கும் வகையில், தொடங்கிடு இந்தியா இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டாளர்களுக்கு தகவல் வழங்கி சேவை செய்வதற்காக தொடங்கிடு இந்தியா செல்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-ஜூலை 15-வரை 11,129 புதுமைத் தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிலையில், 2,15,000-க்கும் அதிகமான பதிவுகள் வரப்பெற்றுள்ளன.

     இந்தத் தகவலை இன்று (23.07.2018) மக்களவையில் மத்திய தொழில், வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு.சி.ஆர். சவுத்ரி எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

--------


(रिलीज़ आईडी: 1539746) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी