சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
வக்ஃப் நிலங்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பு
Posted On:
18 JUL 2018 2:08PM by PIB Chennai
1995ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தின் 32-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரிய சொத்துகளை பராமரிக்கும் அதிகாரம் மாநில வக்ஃப் வாரியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்க, சட்டப்பூர்வ நடவடிக்கையை வக்ஃப் வாரியங்கள் எடுக்க முடியும். மேலும் வக்ஃப் சட்டத்தின் 54 மற்றும் 55-வது பிரிவுகள் ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வகை செய்கின்றன. எனவே, இது குறித்த விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை.
வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திருத்தங்களின்படி, மாநில / யூனியன் பிரதேச வக்ஃப் வாரியங்கள் குறிப்பிட்டக் காலத்திற்குள், வக்ஃப் நிலங்களை அளவை செய்ய நில அளவை ஆணையர்களை நியமித்துக் கொள்ளலாம். முறையான அனுமதியின்றி வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதியவும், மாநில வக்ஃப் வாரியங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, வக்ஃப் சொத்துக்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, மூன்று உறுப்பினர் தீர்ப்பாயங்களையும் அமைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு கண்காணிக்கும்.
மாநில வக்ஃப் வாரியங்கள், மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு அளித்த தகவலின்படி, 2015-16ஆம் நிதியாண்டில் வக்ஃப் சொத்துகளிலிருந்து வசூலிக்கப்பட்ட தொகை ரூ.29,78,06,985 ஆகும்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
===============
(Release ID: 1538988)
Visitor Counter : 589