பிரதமர் அலுவலகம்

யு 20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸுக்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 13 JUL 2018 10:49AM by PIB Chennai

யு 20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஹிமா தாஸுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“யு 20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் 400 மீட்டர் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீராங்கனை ஹிமா தாஸ் குறித்து இந்தியா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. அவரைப் பாரட்டுகிறேன். அவருடைய இந்தச் சாதனையானது வரும் ஆண்டுகளில் இளம் தடகள வீரர்களுக்கு உத்வேகத்தை ஊட்டப் போவது நிச்சயம்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.



(Release ID: 1538545) Visitor Counter : 123