பிரதமர் அலுவலகம்

ஜெய்ப்பூரில் பிரதமர் நகர உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; பிரதமரின் முன்னிலையில் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பரிமாறினர்; பொது மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

Posted On: 07 JUL 2018 5:31PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கான 13 நகர்புற உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வகையில் கல்வெட்டை திரனதுவைத்தர்.

பிரதமரின் முன்னிலையில், மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் மாநில அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காணொளி திரை காட்சி திரையிடப்பட்டது. இந்த திரை காட்சியை ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே வழங்கினார். பிரதமர் இலவச எரிவாயு திட்டம், பிரதமர் முத்ரா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பலவேறு திட்ட பயனாளிகள் இதில் பங்கேற்றனர்.

பெருமளவு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தான் மக்கள் தங்களின் விருந்தாளிகளை எவ்வாறு வரவேற்கின்றனர் என்பதை தான் முதல் முறையாக இன்று தான் காண்பதாக கூறினார். கடந்த சில ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் உண்மையை பார்வையாளர்கள் காணலாம் என்று கூறினார். ராஜஸ்தானை தைரியத்தின் மண் என்று குறிப்பிட்ட பிரதமர், இயற்கையோடு ஒத்து வாழ்வதாகட்டும் அல்லது நமது தேசத்தை காப்பதாகட்டும் ராஜஸ்தான் என்றும் முன்னோடியாக திகழ்கிறது என்றார்.

ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜேவை பாராட்டிய பிரதமர் அம்மாநிலத்தின் பணி முறையையே அவர் மாற்றியுள்ளதாக கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பணிபுரிந்து வருகிறது என்று கூறினார். இங்கு கூடியிருக்கும் அனைவரும் இன்று காணொளிப்பதிவில் வந்த அனைத்து பயனாளிகளின் மகிழ்ச்சிக்கும் சாட்சியாக உள்ளனர்.

விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு எவ்வாறு பணிபுரிந்து வருகிறது என்பதை பிரதமர் விவரித்து பேசினார். தற்போதைய கரிப் பருவத்தில் பல்வேறு பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை பற்றி எடுத்துக்கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கம், மக்கள் நிதி திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம், முத்ரா திட்டம், இலவச எரிவாயுத் திட்டம், சுகாதார திட்டம் போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து விவரித்தார்.

அடுத்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் 70 ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் வளர்ச்சி அடைந்த ராஜஸ்தானை உருவாக்க நாம் எடுத்துக்கொண்ட உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம், இது புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.



(Release ID: 1538135) Visitor Counter : 142