விண்வெளித்துறை
விண்வெளி பயணக் குழு தப்பிக்கும் முறைக்கான தொழில்நுட்ப செயல்முறை விளக்கம் ஓடத்திலிருந்து விண்வெளி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
Posted On:
05 JUL 2018 10:09AM by PIB Chennai
மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்திற்கு மிகத் தேவையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறைக்கான தகுதிச் சோதனை தொடரில் முதல் சோதனையை இன்று (05.07.2018) இஸ்ரோ மேற்கொண்டது. விண்கலத்தை விண்ணில் செலுத்தும் போது கோளாறு ஏற்பட்டால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பான தூரத்திற்கு வெகு விரைவாக மீட்டு கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறையாகும். செலுத்து தளத்தில் ஏதாவது நெருக்கடி ஏற்படும் போது பயணக்குழுவினரை பத்திரமாக மீட்பதற்கான ஒத்திகை முதல் சோதனையில் மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து மணிநேர கவுண்ட்டவுனுக்குப் பிறகு 12.6 டன் எடை கொண்ட செயற்கையாக உருவகப்படுத்தப்பட்ட வீரர்கள் குழுவினரைக் கொண்ட கலம் இந்திய நேரப்படி காலை ஏழு மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது. இந்தச் சோதனை 259 நொடிகளில் நடந்தது. உருவகப்படுத்தப்பட்ட வீரர்கள் குழுவினரைக் கொண்ட கலம் விண்ணை நோக்கி செலுத்தப்பட்டு பின்னர், வங்காள விரிகுடாவை நோக்கி வளைக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2.9 கிலோமீட்டர் தூரத்தில் பாரசூட் மூலம் பூமிக்கு மிதந்து வரும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விரைந்து செயல்படும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏழு மோட்டார்கள் சக்தியுடன் உருவகப்படுத்தப்பட்ட பயணக்குழுவினரைக் கொண்ட கலம் சுமார் 2.7 கிலோமீட்டர் தூரத்தை எட்டியது. இந்த சோதனையின் போது நிகழ்ந்த பல்வேறு நடைமுறைகளை சுமார் 300 தொலையுணர் கருவிகள் பதிவு செய்தன. மீட்பு நடைமுறையின் ஒரு பகுதியாக உருவகப் பயணக் குழுவினரின் கலத்தை மீட்பதற்கு 3 படகுகள் பயன்படுத்தப்பட்டன.
(Release ID: 1537862)