மத்திய அமைச்சரவை

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை 1996 மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996க்கு உரிமை கொண்டாட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:34PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை 1996 மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996-ன் உரிமைகளை, இணையதளம் மற்றும் டிஜிட்டல் சூழலுக்கும் நீட்டிக்க மத்திய வர்த்தக தொழில்துறையின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அளித்த கருத்துருவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இணையதளம் மற்றும் செல்போன் வாயிலாக மின்னணு வணிகத்திற்கான வர்த்தக வாய்ப்புகள் பற்றி, விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு, உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்கி, வணிக மயமாக்குவதன் மூலம், அறிவுசார் சொத்துரிமையின் மதிப்பை, அறிந்துகொள்ளும் நோக்கில், 12 மே 2016-அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கைக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பலன்கள்:

   காப்புரிமை தொழிலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உருவாக்கப்பட்ட இந்த உடன்படிக்கைகள் இந்தியாவிற்கு உதவிகரமாக இருக்கும்:

  • படைப்புகளுக்கான தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு, படைப்பாளிகள்,  தங்களது பணிக்கான பலனை அனுபவிப்பதற்கான உரிமையை வழங்குதல்.
  • சர்வதேச காப்புரிமை விதிகளின்படி, வெளிநாட்டுப் படைப்புகளுக்கு இந்தியா ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதை போன்று, உள்நாட்டு படைப்பாளிகள் வெளிநாடுகளில் தங்களதுப் படைப்புகளுக்கு வெளிநாடுகளில் உரிமைகோர ஏதுவாக, இந்திய காப்புரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் காப்புரிமை பெறுவதற்கு, இதுபோன்ற உடன்படிக்கைகளில்  வகை செய்யப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் சூழலில் தங்களது முதலீட்டுக்குரிய பலனை பெறும் வகையில், படைப்புகளை வினியோகித்து, நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
  • வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வலுவான  படைப்பாற்றல் சார்ந்த பொருளாதாரம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பங்களிப்பு.

பின்னணி:

காப்புரிமைச் சட்டம் 1957:

    காப்புரிமைச் சட்டம் 1957-ன் நிர்வாகம் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு மார்ச் 2016-ல் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, காப்புரிமைச் சட்டம் 1957, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கைகளுடன் போட்டிப்போடும் அளவுக்கு உள்ளதா என்பதை ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அத்துடன், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புடன் இணைந்தும், கூட்டு ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

  காப்புரிமைச் சட்டம் 1957, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, 2012ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. “ பொது மக்களை தொடர்பு கொள்ளுதல் ”  என்ற சொல்லுக்கு, டிஜிட்டல் சூழல் (பிரிவு 2 (எஃப்.எஃப்.))-க்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது- தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கை (பிரிவு 65ஏ)& உரிமை மேலாண்மை தகவல்(பிரிவு 65பி); செயல்பாட்டாளர்களின் தார்மீக உரிமை (பிரிவு 38பி);  செயல்பாட்டாளர்களின் தனி உரிமை(பிரிவு 38ஏ); மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாதுகாப்பு அளித்தல் (பிரிவு 52(1) (பி) மற்றும் (சி)) ஆகியவை தொடர்பான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

  உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மார்ச் 6, 2002 அன்று நடைமுறைக்கு வந்தது. இதனை இதுவரை 96 ஒப்பந்த அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பெர்னே உடன்படிக்கை (இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளை பாதுகாத்தல்)-ன்படி, சிறப்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை டிஜிட்டல் சூழலுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், தேவைகளைப் பூர்த்தி செய்து, கலந்தாலோசனை வாயிலாக வேலை கிடைக்கச் செய்யும்  வகையில், டிஜிட்டல் சூழலுக்கு ஏற்ற உரிமைகளை அங்கீகரிக்கவும், வகை செய்யப்பட்டுள்ளது.

  உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 2002 மே 20 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதனை 96 ஒப்பந்த அமைப்புகள் ஏற்றுக்கொண்டு உறுப்பினராகியுள்ளனர். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை,  இரண்டு விதமான பயனாளிகள், குறிப்பாக டிஜிட்டல் சூழல் – (i) செயல்பாட்டாளர்கள் (நடிகர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்டோர் ), (ii) ஃபோனோகிராம் தயாரிப்பாளர்களின் (ஒலிப்பதிவு) உரிமைத் தொடர்பான அம்சங்களை எதிர்கொள்ளும். இந்த உடன்படிக்கை, காப்புரிமைப் பெற்றவர்கள் புதிய டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் வினியோகதாரர்களுக்கு இடையே பேச்சு நடத்துவதற்கு அதிகாரம் அளிக்கிறது.  செயல்பாட்டாளர்களின் தார்மீக உரிமைகளை முதல்முறையாக அங்கீகரிக்கவும், அவர்களுக்கு தனித்துவ பொருளாதார உரிமைகள் வழங்கவும் வகை செய்கிறது.

  இந்த இரண்டு உடன்படிக்கைகளும், படைப்பாளிகள் மற்றும் காப்புரிமை பெற்றவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, தங்களது படைப்புகளை பாதுகாக்கவும், தகவல்களை பாதுகாக்கவும், தேவையான நடைமுறைகளை வழங்குகின்றன. உதாரணமாக, தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உரிமை மேலாண்மைத் தகவல்களை பாதுகாக்கலாம்.

================



(Release ID: 1537677) Visitor Counter : 689