மத்திய அமைச்சரவை

கற்பித்தல், நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு, மத்திய அரசின் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கற்பித்தல்/ மருத்துவ பராமரிப்பு / பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகிய பணிகளுக்கு மாற்றவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 JUN 2018 3:46PM by PIB Chennai

கற்பித்தல், நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்தி்ர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு, மத்திய அரசின் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கற்பித்தல்/ மருத்துவ பராமரிப்பு /  பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகிய பணிகளுக்கு மாற்றவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 மத்திய சுகாதார சேவைகள், இதர அமைச்சகங்கள் / துறைகள் / மத்திய அரசு அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் 62 ஆண்டுகள்  வயது அடைந்த பிறகு, தங்கள் மருத்துவ நிபுணத்துவம் சார்ந்த துறைகளில் மட்டுமே பணி புரிவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவையின் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இந்த முடிவை திறம்பட அமல்படுத்துவதற்கு ஏற்படும் இடையூறுகளை அகற்றுவதற்கென  15.06.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை மாற்றியமைத்து செயல்கள் மேற்கொள்ளப்படும்.

முக்கிய தாக்கம்:

    மேலும் அதிக எண்ணிக்கையிலான மத்திய அரசு மருத்துவர்களின் திறன் மேம்பாட்டுக்கும், தலைமை பண்பு மேம்பாட்டுக்கும், இது வழி வகுக்கும். மேலும், மருத்துவக்கல்வி, நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு சேவைகள், தேசிய சுகாதாரத் திட்ட அமலாக்கம், ஆகியவற்றுக்கு நல்ல அனுபவம் மிக்க மருத்துவர்களின் சேவைகளை இது கிடைக்கச் செய்யும்.

பயனாளிகள்:

 மருத்துவக்கல்வி, நோயாளிகள் மருத்துவப் பராமரிப்புச் சேவைகள், தேசிய சுகாதாரத் திட்ட அமலாக்கம், ஆகியவற்றுக்கு நல்ல அனுபவம் மிக்க மருத்துவர்களின் சேவைகளை கிடைக்கச் செய்வதால்  ஒட்டுமொத்த சமுதாம் நல்ல பயன்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் பயன்கள் நாடு முழுமைக்கும் படிப்படியாகக் கிடைக்கும்.

பின்னணி:

   மருத்துவர்கள் பற்றாக்குறை, மத்திய சுகாதாரச் சேவைகளில் மருத்துவர்கள் சேரும் எண்ணிக்கைக் குறைவு மற்றும் சேவையை பாதியில் விட்டுச்செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளை சமாளிக்க மத்திய அமைச்சரவை தனது 15.06.2016 கூட்டத்தில் மத்திய சுகாதார சேவை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது.  அதனைத் தொடர்ந்து 27.09.2017 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய ரயில்வே, ஆயுஷ், மத்திய பல்கலைக்கழகங்கள், வடக்கு மண்டலங்கள்  உள்ளிட்ட பல்வேறு இதர அமைச்சகங்கள்  /   துறைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த ஒப்புதல் அளித்தது. எனினும், 62 வயதுக்கு மேற்பட்ட முதுநிலை மருத்துவர்களின் சேவைகளை அடிப்படை மருத்துவ தொழில்களான நோயாளிகள் பராமரிப்பு / மருத்துவக் கல்லூரிகளில் கற்பித்தல் / சுகாதாரத் திட்டங்கள் அமலாக்கம், பொது சுகாதார திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதப்பட்டது.

-----

 


(Release ID: 1536788) Visitor Counter : 148