பாதுகாப்பு அமைச்சகம்

மானசரோவர் யாத்திரைக்கு விமான இணைப்பு : இந்திய விமானப்படையின் முயற்சி

Posted On: 20 JUN 2018 11:53AM by PIB Chennai

இந்திய விமானப்படை, பித்தோராகர் மற்றும் குஞ்சி இடையே மூன்று மாதங்களுக்கு மட்டும் தனது விமான இணைப்புச் சேவையை தொடங்க இருக்கிறது. இந்த விமான சேவையின் மூலம்  முன் பதிவு செய்த 1080 பயணிகள் தங்களின் வருடாந்திர கைலாஷ் மானசரோவர் யாத்ரா பயணத்தை குஞ்சியிலிருந்து தொடங்கலாம். . இந்த விமான சேவையை இந்திய விமானப்படை 18 ஜூன் 2018 அன்று தொடங்கியது.

இந்த இரு இடங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்து வசதி மிக மோசமாக உள்ளதால், பயணிகளை விமானப்படை விமானங்களில் ஏற்றிச் செல்ல ஏதுவாக பாதுகாப்பு துறையை வெளியுறவு அமைச்சகம் அணுகியது.

இந்த பணியை இந்திய விமானப்படை தலைமையகம் மேற்கு விமானப்படை பிரிவிடம் ஒப்படைத்தது.

இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்தில் உள்ளதால், உயரிய மலைப்பகுதியில் பறப்பதற்கும், உயரமான இடங்களில் விமானத்தை இறக்குவதற்கும் அனுபவம் வாய்ந்த விமானப் படையின் ஹெலிகாப்டர் விமானிகளிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                                         ****



(Release ID: 1536048) Visitor Counter : 123


Read this release in: English , Bengali , Malayalam