நிதி அமைச்சகம்

பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வரித்தளத்தை விரிவுப்படுத்தவும் ஜி.எஸ்.டி. வழிவகுத்துள்ளது

Posted On: 18 JUN 2018 1:08PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பொருளாதாரத்தை முறைப்படுத்தவும் மறைமுக வரிகள் மட்டுமின்றி நேர்முக வரிகளையும் அதிகப்படுத்த வழிவகுத்துள்ளது. கடந்த காலத்தில் சிறுவகை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வு குறித்த தகவல்களை மத்திய அரசு ஓரளவே வைத்திருந்தது. ஏனெனில் பொருள் உற்பத்தி நிலையில் மட்டுமே உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. மாநிலங்கள் தங்களின் எல்லைகளுக்கு வெளியே உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி குறைந்த தகவலையே கொண்டிருந்தன. தற்போது ஜி.எஸ்.டி. காரணமாக நேரடி மற்றும் மறைமுக வரிவசூல் குறித்த தகவல்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தடையின்றி கிடைப்பது சாதாரணமாகி விட்டது.

 

வரியின் அடித்தள விரிவாக்கத்திற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிகின்றன. 2017 ஜூன், ஜூலை இடையே 6.6 லட்சம் புதிய முகவர்கள் ஜி.எஸ்.டி. பதிவை கோரியுள்ளனர். முன்னதாக இவர்கள் வரிவிதிப்பிற்கு வெளியே இருந்தவர்கள். முறைப்படுத்துதலுக்கான அனுகூலங்கள் அதிகரிக்கும்போது அதன் தொடர்ச்சியாக இத்தகைய பதிவுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளித்துறை முழுவதும் தற்போது வரிவளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் நிலப்பிரிவு மற்றும் கட்டப்படவிருக்கும் வீடுகளை குறிக்கின்ற ”பணி ஒப்பந்தங்களுக்கான” மனை வணிக பரிவர்த்தனைகளும் இந்த வரிவளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மாபெரும் வெளிப்படைத்தன்மையையும் ஏற்கனவே வரிவளையத்திற்கு வெளியே இருந்த சிமெண்ட், இரும்பு மற்ற சில பொருட்களை முறைப்படுத்துவதையும் அனுமதிக்கும். இந்த ஒழுங்குமுறை காரணமாக வரி செலுத்தும் போது கணக்குக் காட்ட உள்ளீடு பொருட்கள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களை பெறுவது கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு அவசியமானதாகும்.

 

மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான மறைமுக வரியான ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல்மயமாவதோடு மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகவும் இது அமைகிறது. இதன் மூலம் ஏற்கனவே கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யப்படாத பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படுகின்றன. இவையெல்லாம் இதுவரை வரிவளையத்திற்கு வெளியே இருந்தன. வரிவிதிப்பு முறையில் வெளிப்படைத்தன்மையையும் வரி வசூலை அதிகரிக்கவும் ஜி.எஸ்.டி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நபரை பெருந்தன்மை உள்ளவராக மாற்றுகிறது. (வரி செலுத்த வேண்டியவர்களாக இருந்து) வரிவளையத்திற்கு வெளியே இருந்தவர்களுக்கு இது சிக்கலை அதிகரிக்கும்.

 

நடைமுறைகளை எளிமையாக்குவதற்காக 2017 ஜூலை முதல் தேதி ஜி.எஸ்.டி. அமலாக்கப்பட்டதிலிருந்து எண்ணற்ற நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரிசெலுத்துவோருக்கான அறிவுறுத்தல், அறிவு பகிர்தல், தகவல்களை அளித்தல், கேள்வி பதில்களுக்கு விடை கூறுதல் ஆகிய வழிகளில் உதவி செய்வது போன்ற விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வரிசெலுத்துவோருக்கு வசதிகளை செய்து தரவும், வாடிக்கையாளர்களுக்கு பயன்களை நீடிக்கவும் இன்னும் கூடுதலான எளிமையாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


(Release ID: 1535764)
Read this release in: Malayalam , English , Marathi