மத்திய அமைச்சரவை

வடகிழக்கு சபையை மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 JUN 2018 6:22PM by PIB Chennai

வடகிழக்கு சபையின் பதவி வழித் தலைவராக மத்திய உள்துறை அமைச்சரை நியமிக்கவும், அனைத்து 8 வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை அதன் உறுப்பினர்களாக நியமிக்கவும் மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்த திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இந்த சபைக்கு வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தாக்கம்:

  வடகிழக்கு சபை மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் மூலம் பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.  புதிய ஏற்பாட்டின்படி, மத்திய உள்துறை அமைச்சரை தலைவராகவும், வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சரை துணைத்தலைவராகவும், அனைத்து வடகிழக்கு மாநில ஆளுநர்கள்,   முதலமைச்சர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட  இந்த சபை மாநிலங்களுக்கு இடையிலான விஷயங்களை மேலும் விரிவான வகையில் விவாதிக்க உதவும். எதிர் காலத்தில் பொதுவான அணுகுமுறைகளை ஏற்படுத்துவது குறித்தும் சபை ஆலோசிக்கும்.

  பல்வேறு மண்டல சபைகள் மேற்கொள்ளும் பணிகளை இப்போது வடகிழக்கு சபை அமல்படுத்தலாம். மாநிலங்களுக்கு இடையிலான போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கடத்துதல், எல்லை தாவாக்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் வடகிழக்கு சபை விவாதிக்கும்.

வடகிழக்கு சபையை (NEC ) மாற்றியமைப்பதன் மூலம் வடகிழக்கு மண்டலத்தில் அந்த அமைப்பு மேலும் செயலூக்கத்துடன் இயங்கும்.

 

இந்த சபை அவ்வப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கான பல்வேறு திட்டங்களை பரிசீலித்து ஆய்வு நடத்தி, உரிய பரிந்துரைகளை அளிக்கும். இது வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்குத் துணை புரிவதற்கான வலுவான பரிந்துரைகளை அளிக்கும். மாற்றத்தின்படி வடகிழக்கு மாநில கவுன்சிலுக்குக் கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு அளிக்கும்.

பின்னணி:

வடகிழக்கு மாநில கவுன்சில் (NEC ) 1971ம் ஆண்டு வடகிழக்கு மாநில கவுன்சில் சட்டத்தின் கீழ் ஓர் உயர் அமைப்பாக நிறுவப்பட்டது. இதன்கீழ் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சமமான ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு வழியமைக்கும். அந்த சட்டத்தில் 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வடகிழக்கு மண்டலப் பகுதிக்கான மண்டல அளவிலான திட்ட அமைப்பாகச் செயல்பட வகை செய்யப்பட்டது. இந்த அமைப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் முன்னுரிமைத் திட்டங்களையும், சிக்கம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட திட்டங்களையும் இந்த வடகிழக்கு மாநில கவுன்சில் முறைப்படுத்தும்.



(Release ID: 1535394) Visitor Counter : 130