மத்திய அமைச்சரவை
இதர பிற்படுத்தப்பட்டோர் துணை வகைப்பாட்டு ஆணையத்தின் நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
13 JUN 2018 6:28PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த வகைப்பாட்டை ஆராயும் ஆணையத்தின் காலத்தை 2018, ஜூலை 31ம் தேதி வரையில் நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு ஜூன் 20 ஆகும்.
இதர பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் மாநில அரசுகள், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள், பல்வேறு சாதி அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆகிய பலதரப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தியது.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டோரில் இதர பிற்படுத்தப்பட்டோர், மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசு நிறுவனங்களிலும், அரசுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து சாதி வாரியான ஆவணங்கள், பதிவேடுகளையும் ஆணையம் பெற்று பரிசீலித்தது. திரட்டப்பட்ட தரவுகள் குறித்து விரிவான பார்வைக்காக ஜூலை 31ம் தேதி வரையில் ஆணையம் நீட்டிப்புக் கோரியுள்ளது.
*****
(रिलीज़ आईडी: 1535392)
आगंतुक पटल : 198