மத்திய அமைச்சரவை

இந்தியா – பெரு நாடுகளுக்கு இடையில் உடன்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUN 2018 6:25PM by PIB Chennai

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் பெரு நாட்டுக்கும் இடையில் பெருநாட்டின் தலைநகர் லிமாவில் 2018, மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவனங்களுக்கு இடையில் ஒத்துழைப்புடன் கூடிய நல்லுறவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்துவதற்காக இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.  இதன்படி இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் சமமான பலன்களைத் தரக்கூடிய வகையில் புதிய, புதுப்பிக்கத் தக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஏற்படும்.

இந்த உடன்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் செயல்பணிகளை மேம்படுத்துவதற்கான கூட்டுக் கமிட்டி அமைக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையில் இரு தரப்பு ஒத்துழைப்பை இந்த உடன்பாடு வலுப்படுத்தும்.

 

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1535384) வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Gujarati , Malayalam