தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேலைவாய்ப்பு சார்ந்த புள்ளி விவர வெளியீடுகளில் மேலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை

Posted On: 11 JUN 2018 5:31PM by PIB Chennai

  புள்ளி விவர வெளியீடுகளில் மேலும்  வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க அண்மைக் காலமாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற வெளியீடுகளில் உண்மையான முன்னோக்கங்களை வெளியிடுவதன் மூலம், சம்பந்தப்பட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்கள், இதுபோன்ற மதிப்பீடுகள் தயாரிக்கும் நடைமுறைகள் குறித்து, அறிந்துகொள்ள முடியும்.

  நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து, தொழிலாளர் துறை,  வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வு  மற்றும் காலாண்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இரண்டு பெரிய ஆய்வுகளை மேற்கொண்டது. இதுவரை, ஐந்து  வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது பற்றிய அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஆறாவது வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வு (2016-17)-க்கான களப் பணிகள் முடிவடைந்து,  புள்ளிவிவர சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆறாவது வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வு  பற்றிய அறிக்கை தயாரிப்புப் பணிகள்  2018 செப்டம்பருக்குள் நிறைவடையும். 

  காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு (புதிய தொடர்), ஒரு நிறுவனம் சார்ந்த ஆய்வாக, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட, நிறுவனங்களின் அடுத்தடுத்த காலாண்டுகளுக்கான வோலைவாய்ப்பு நிலைமைப் பற்றிய, ஒப்பீடு மாற்றத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

  தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் சட்ட ரீதியான அமைப்பான  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம், சம்பள விவரங்கள் பற்றிய மாதாந்திர அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. பிரதமரின் ரோஜ்கார் புரோட் சஹான் திட்டத்தின்கீழ், 58,400 நிறுவனங்களில் பணிபுரியும் 46.36 லட்சம் பணியாளர்கள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, ரூ.855 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.

=================


(Release ID: 1535210) Visitor Counter : 180
Read this release in: English , Urdu , Hindi , Bengali