நித்தி ஆயோக்  
                
                
                
                
                
                
                    
                    
                        மேலும் மூவாயிரம் பள்ளிகளில் அறிவுக் கூடங்கள் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                12 JUN 2018 1:51PM by PIB Chennai
                
                
                
                
                
                
                “நிதி ஆயோக்” கீழ் செயல்படும் அடல் புதுமையாக்க இயக்கம் (NITI Aayog’s Atal Innovation Mission) நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் அறிவுக் கூடங்களை (Tinkering Labs) அமைக்கிறது. அடல் அறிவுக் கூடங்கள் (Atal Tinkering Labs) என அழைக்கப்படும் இந்தக் கூடங்கள் இளைய தலைமுறையினரிடையில் படைப்பாற்றல், அறிவுத் தேடல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். ஏற்கெனவே உள்ள அடல் அறிவு ஆய்வுக் கூடங்களுடன் புதிதாக அமைக்கப்படும் அறிவுக் கூடங்களையும் சேர்த்து மொத்தம் 5,441 அடல் அறிவுக் கூடங்கள் செயல்படும்.
அடல் அறிவுக் கூடங்களை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 20 லட்சம் மானிய உதவி அளிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செகண்டரி பள்ளி மாணவர்களுக்கு இடையில் தொழில்முனைவுத் திறன், புதுமையாக்கம் ஆகிய திறன்கள் ஊக்குவிக்கப்படும். இத்தகைய அறிவுக் கூடங்கள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும். இவை புதுமையாக்கத் திறனை வளர்ப்பதற்கான சூழல், தொழில்நுட்பத்தில் புதுமையான மாற்றங்களை உருவாக்குதல், கற்பித்தலில் புதுமை ஆகியவற்றுக்கு வழியமைக்கும்.
“அடல் அறிவு ஆய்வுக் கூடத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மேலும் மூவாயிரம் பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் ஏராளமான குழந்தைகள் புதுமையாக்கம், அறிவுத் தேடல் முப்பரிமாண அச்சு (3D Printing), ரோபாட்டிக்ஸ், இணைய உலகம்  (Internet of Things - IoT), மைக்ரோ ப்ராசர்கள் (Microprocessors) ஆகியவற்றில் ஈடுபட வழியேற்படும்” என்று அடல் புதுமையாக்க இயக்கத்தின் (Innovation Mission) மேலாண் இயக்குநர் திரு. ராமநாதன் ரமணன் தெரிவித்தார்.
 
******
 
                
                
                
                
                
                (Release ID: 1535203)
                Visitor Counter : 191