பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

2018 கம்பெனி கலைப்பு மற்றும் திவால் திருத்த அவரசச் சட்ட பிரகடனத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 06 JUN 2018 3:16PM by PIB Chennai

வீடுகள் வாங்குபவர்களின் அந்தஸ்த்தை நிதியியில் கடன் வழங்குவோர் என்ற நிலைக்கு அங்கீகாரம் வழங்குவதில் இந்த அவசரச் சட்டம் மிகுந்த உதவியாக அமைந்துள்ளது.  கடன் வழங்குவோர் சங்கத்தில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து முடிவெடுக்கும் நடைமுறையில் அவர்களை ஒருங்கிணைந்த பகுதியாக இது மாற்றும். தவறாக செயல்படும் கட்டட நிறுவனங்களுக்கு எதிராக 2016 கம்பெனி கலைப்பு திவால் சட்டத்தின் 7-ஆவது பிரிவை பயன்படுத்தி நிவாரணம் பெற வீடு வாங்குபவர்களுக்கு இது உதவுகிறது. விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குபவராக இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையினரும் இதனால் பெரிய நன்மைகளை அடைவார்கள். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் சிறப்பு அமைப்பை அவர்களுக்கு ஏற்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. கம்பெனி கலைப்பு தீர்மான நடைமுறையில் ஈடுபட்டிருக்கும் தொழில் நிறுவனத்தின் உரிமையாளரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்ற உடனடி சலுகையை இச்சட்டம் வழங்குகிறது. இவர் வேண்டுமென்றே கடன் திரும்ப செலுத்தாதவராக இருக்கும் வரை இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுநலன் கருதி குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு மேலும் விலக்குகள் அல்லது திருத்தங்கள் அனுமதிக்கவும் மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

சிஐஆர்பி-யின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்காக இந்த அவசரச் சட்டம் கடுமையான நடைமுறையை அறிவித்துள்ளது. 2016 ஐபிசி சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற விரும்பும் மனுதாரருக்கு இந்த நடைமுறை பொருந்தும். இனிமேல் இத்தகைய விலக்கிக்கொள்ளும் மனு 90 சதவீத வாக்களிப்பு பங்குகளை பெற்றுள்ள கடன் வழங்கியோர் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் ஆர்வம் தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக மட்டுமே இத்தகைய விலக்கிக்கொள்ளும் மனு அனுமதிக்கப்படும். அதாவது ஆர்வம் தெரிவிக்கும் அறிவிப்பு நடைமுறைக்கு வந்து ஏலம் தொடங்கியவுடன் விலக்கிக்கொள்வதற்கு அனுமதி கிடைக்காது. தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட ஏல கேட்புகளை பரிசீலிக்க தடை, காலதாமத ஏலதாரர்களுடன் பேரம் நடத்தத் தடை, சொத்துக்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான தெளிவான நடைமுறை ஆகியன இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். 

கம்பெனி கலைப்பை ஊக்குவிக்கும் வகையில் வாக்களிப்பு வரம்பு 75 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கம்பெனி கலைப்பு திட்ட அனுமதி, சிஐஆர்பி கால நீட்டிப்பு உள்ளிட்ட அனைத்து பெரிய முடிவுகளுக்கும் இது பொருந்தும். மேலும் கம்பெனி கடன்தாரர்களுக்கு வசதி அளிக்கும் வகையில் சிஐஆர்பி சமயத்தில் அதனை நடைமுறையில் இருக்கும் நிறுவனமாக கருதி வாக்களிப்பு முடிவுக்கான வரம்பு 51சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பங்குகள் வைத்திருப்போர் வைப்புத்தொகை வைத்திருப்போர் மற்றும் இதர அனைத்து வகை நிதி கடன் கொடுத்தோர் ஆகியோர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அமைப்பு ஒன்றுக்கும் சட்டம் வகை செய்தது. இவர்கள் அனுமதி பெற்ற பிரதிநிதிகள் மூலம் கடன் கொடுத்தோர் குழுக் கூட்டங்களில் பங்கேற்கலாம். வாராக்கடன்கள் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் 2016 ஐபிசி சட்டத்தின் 29 ஏ பிரிவு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல வாராக்கடன் கொண்டுள்ள நிறுவனங்களின் மனுவுக்கு தீர்வு காண்பதற்காக 2016 ஐபிசி சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகால தணிப்பு பருவம் அனுமதிக்கப்படுகிறது. அதாவது இந்த 3 ஆண்டு காலத்தில்  இத்தகைய வாராக்கடன்கள் கம்பெனி கலைப்பு மனுவை தகுதியற்றதாக செய்ய இயலாதது.

சட்டத்தின் பிரிவு 29 ஏ-யில் காணப்படும் விரிவான தகுதி நீக்கத்தை கருத்தில் கொண்டு ஏலத் தகுதிக்கு சான்றளிக்கும் பிரமாண பத்திரத்தை கம்பெனி கலைப்பு  மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயிக்கிறது. இதனை அடுத்து தனது தகுதிக்கு சான்றளிக்கும் பொறுப்பு மனுதாரரிடம் வழங்கப்படுகிறது.

பல்வேறு சட்டங்களின் கீழ் பல்வேறு சட்ட நிபந்தனைகளை நிறைவு செய்ய கம்பெனி கலைப்பு மனுதாரருக்கு குறைந்தது ஒரு ஆண்டு கருணை காலத்தை சட்டம் வழங்குகிறது. கம்பெனி கலைப்பு திட்டத்தை உரிய நிர்வாகம் வெற்றிகரமாக அமல்படுத்துவதில் இது பெரிதும் உதவும்.

உறுதியளிப்பு அமல்படுத்தும் காலக்கெடு பொருந்தாத நிலை, சட்டத்தின்படி கம்பெனி கலைப்பு தீர்மானத்தை தொடங்குவதற்கு கம்பெனி கடன்தாரர்களுக்கு சிறப்பு தீர்மான தேவையை அறிமுகம் செய்தல், சிஐஆர்பி காலத்தில் கம்பெனி கடன்தாரர் இடைக்கால நிதி நிலவரத்தை தாராளமாக்குதல், வழங்கிய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்திய திவால் வாரியத்துக்கு பங்களித்தல் ஆகியன இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இதர மாற்றங்களாகும்.

கம்பெனி கலைப்பு சட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு மேலே குறித்த மாற்றங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்பெனி கலைப்பு, எடுத்துக் கொள்ளும் காலம், ஏற்படும் செலவினம், திரும்பப்பெறும் மதிப்பு வீதாச்சாரம், ஆகியவற்றிலும் இந்த மாற்றங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

                           ---



(Release ID: 1534695) Visitor Counter : 452


Read this release in: English , Urdu , Marathi , Hindi