மத்திய அமைச்சரவை

நீடித்த நகர்ப்புற மேம்பாட்டில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 06 JUN 2018 3:23PM by PIB Chennai

2018 மார்ச் மாதம்  நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் இந்தியாவும் பிரான்சும் செய்து கொண்ட உடன்படிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை ஐந்தாண்டு காலங்களுக்கு அமலில் இருக்கும்.

 

விவரங்கள்

பொலிவுறு நகரங்கள் மேம்மட்டில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது, நகர்ப்புற மக்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது, நகர்ப்புற குடியேற்றம் மற்றும் பயன்பாடுகள் (குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள்), திடக்கழிவு அகற்றம் மற்றும் மேலாண்மை, நில மீட்பு, வருவாய் அல்லாத நீர் மேலாண்மை, நீர் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், நீர்த்தேக்கத்தில் செயற்கை முறையில் நீர் சேமிப்பு, சுழற்சி பொருளாதாரம், மக்களுக்கான வீடுகள், பசுமை வீடுகள், நகர்ப்புற திட்டமிடல், பாரம்பரியம், மனித வள மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் அவை தொடர்பான இதர பகுதிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவது இந்த உடன்படிக்கையின் நோக்கங்களாகும்.

 

நடைமுறைப்படுத்தும் யுக்தி

இந்த உடன்படிக்கையின் கீழ் ஒரு கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டு திட்டங்களுக்கான யுக்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்காக உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள கட்டமைப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். இந்தக் கூட்டுப் பணிக்குழு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவிலும் பிரான்சிலும் மாறி மாறி சந்திக்கும்.

 

பெரும் தாக்கம்

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கு இடையே நீடித்த நகர்ப்புற மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

 

பயனாளிகள்

பொலிவுறு நகரங்கள் மேம்பாடு, நகர்ப்புற பெரும் போக்குவரத்து அமைப்புகள், நகர்ப்புற குடியேற்றம் மற்றும் பயன்பாடுகள் (குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள்) திடக்கழிவு அகற்றம் மற்றும் மேலாண்மை, நீல மீட்பு, கட்டுபடியாகக்கூடிய வீடுகள், கழிவு மேலாண்மை, நகர்ப்புற சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த உடன்படிக்கை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

*****


(रिलीज़ आईडी: 1534561) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Bengali , Gujarati , Malayalam